‘ஏன்பா இப்படி டெய்லி குடிச்சிட்டு வரீங்க...’ ‘பெற்ற மகள் என்றும் பாராமல்...’ ‘மின்னல் வேகத்தில் அரிவாளை எடுத்து...’ அதிர வைக்கும் சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்ட பேரையூரில் திருமணமான ஒரே வாரத்தில் மதுபோதையில் பெற்ற மகளை தந்தையே வெட்டிய சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பெரிய பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் சென்னையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வருகிறார். தனது இரண்டாவது மகள் மின்னல் கொடியை பெரியபூலாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவருக்கு கடந்த பிப்- 12ஆம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை மகள் மின்னல் கொடியின் மதிப்பெண் சான்றிதழ் பேரையூரில் உள்ள பள்ளியில் இருப்பதாகவும் அதனை வாங்கி வருவதாக கணவரிடம் தெரிவித்துவிட்டு மகளை அழைத்துக் கொண்டு மாரியப்பன் பேரையூர் சென்றதாக கூறப்படுகிறது.
மதுப்பழக்கம் கொண்ட மாரியப்பன் மகளுக்கு தெரியாமல் சென்று மது அருந்திவிட்டு வந்ததாகவும், வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது தந்தை குடித்து விட்டு வந்ததை கண்டயறிந்த மகள் மின்னல் கொடி தந்தையை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் தன் பையில் வைத்திருந்த அரிவாளால் மின்னல் கொடியை பலமாக வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த மின்னல் கொடியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவமறிந்து விரைந்து வந்த பேரையூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மதியழகன் வழக்கு பதிவு செய்து மதுபோதையில் இருந்த மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் புதுமணப் பெண் அவரது தந்தையால் கொடுரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
