'நடக்க முடியாமல் தள்ளாடியவர் கடைசியில்...' என்ன ஆனார் தெரியுமா..? மதுபோதையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு அருகே மதுபோதையில் நடந்து வந்த நபர் சாக்கடையில் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆதிரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. ஓட்டுநரான இவர் இரவு மதுபோதையில் அந்தியூர் - பர்கூர் சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் சிரமப்பட்டவர் அங்கிருந்த மதகில் சாய்ந்துள்ளார். அப்போது நிதானம் இழந்தவர் அருகே ஓடிக் கொண்டிருந்த சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சாக்கடையில் திருநாவுக்கரசு பிணமாகக் கிடந்ததை இரண்டு நாட்களுக்கு பிறகே பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அந்தியூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருநாவுக்கரசு சடலத்தை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
