'ஸ்கிப்பிங் விளையாடுற கயிறை எடுத்து...' 'பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல்...' மனைவி நகை கேட்டதால் வெறிச்செயல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 12, 2020 01:19 PM

மகனைக் கொலை செய்ய முயன்ற தந்தை, பின்னர் வீட்டுக்கு வந்து பெற்ற மகளையே தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார்.

father murdered his daughter by drowning her.

கன்னியாகுமரி மயிலாடி அருகேயுள்ள மாா்த்தாண்டபுரத்தைச் சோ்ந்தவா் செந்தில் (35). மயிலாடி பேரூராட்சி அலுவலக ஊழியா். இவரது மனைவி அம்பிகா (32). இவா்களது மகன் சாம் சுந்தா்(7), மகள் சஞ்சனா (4). சாம் சுந்தா் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். சஞ்சனா எல்கேஜி படித்து வந்தாா்.

இந்த நிலையில், சித்தி மகளின் திருமணத்திற்குப் போக வேண்டும் என்பதால், நகைகளை மீட்டுத் தரும்படி ராமலட்சுமி தன் கணவர் செந்தில்குமாரிடம் நேற்று காலை கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கோபத்தில், தன் மூன்று வயது மகளைக் கொலை செய்தும், மகனின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ய முயற்சியும் செய்துள்ளார்.

திருமணத்துக்கு செல்ல வேண்டியிருந்ததால் குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை எடுத்திருந்தாா். மாலையில் வீட்டில் இருந்த குழந்தைகளில் சிறுவன் சாம் சுந்தா் ஸ்கீப்பிங் விளையாடும் கயிறால் கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா்.

இதைப் பாா்த்த தாய் அம்பிகா சிறுவனை மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதனிடையே, சிறுமி சஞ்சனாவைக் காணவில்லை என்ற தகவல் வந்தது. உடனே அக்கம்பக்கத்தினா் அம்பிகாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் சிறுமி சடலமாக மிதந்துகொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில், அஞ்சுகிராமம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.இச்சம்பவம் குறித்து போலீசார் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags : #CRUELFATHER