'அப்பா SP, ஆனா பையன்'?... 'இந்த காசையாடா எங்களுக்கு செலவுக்கு அனுப்புன'?... 'மொபைல் GALLERYயில் இருந்த 50 வீடியோக்கள்'... பொறியியல் பட்டதாரியின் கோர முகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்போனில் 50 பெண்களுடன் தனிமையிலிருந்த வீடியோகளை பார்த்து போலீசார் அதிர்ந்து போனார்கள்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது பெங்களூரை சேர்ந்த intelligence bureau எஸ்.பியாக பணிபுரிந்து வருபவரின் மகன் பொறியியல் பட்டம் படித்த சூர்யா என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக மேட்ரிமோனியில் பெண் தேடுவதாக பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த இளைஞர் வீட்டில் வந்து பெண் பார்ப்பதாகக் கூறியுள்ளார். அதன்படி தனியாக வீட்டிற்கு வந்து அந்த பெண்ணோடு பேசி பழகி வந்துள்ளார். பெண் வீட்டாரிடம் தான் மத்திய மனித உரிமை ஆணையத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும் தன்னுடைய பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
பெண் வீட்டாரும் இதனை நம்பிய நிலையில், திருமணத்திற்கு முன்பு நாம் இருவரும் சந்தித்துப் பேசினால் தான் ஒரு புரிதல் வரும் என கூறி சூர்யா அந்த பெண்ணை தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். அந்த பெண்ணும் நாம் திருமணம் செய்து கொள்ளப்போகும் நபர் தானே என்ற ரீதியில் சூர்யாவைத் தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் தனிமையிலிருந்த நிலையில் அதனை வீடியோவாக சூர்யா எடுத்து வைத்துள்ளார்.
பின்னர் பெண்வீட்டாரிடம் நிலம் ஒன்று வாங்க வைத்திருந்த ரூபாய் 7 லட்சத்தைத் திட்டமிட்டு சூர்யா அபகரித்துள்ளார். இளம்பெண்ணை மட்டும் அழைத்துச் சென்று ஏமாற்றி பணத்தை எடுத்துக் கொண்டு செல்போனை (Switch Off) அணைத்து விட்டுத் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து சூர்யாவின் செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டும் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் பின்னர் இச்சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், செல்போன் சிக்னலை வைத்து கோவையில் இளம்பெண்ணுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது சூர்யாவைக் கைது செய்தனர். இதனையடுத்து சூர்யாவை சென்னை கானத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் பல அதிர்ச்சி தரக்கூடிய திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதில் சூர்யா இதுவரைக்கும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள பெண்களைக் குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொய்யாகப் பழகி நம்பிக்கை ஏற்படுத்துவது வழக்கம். பின்னர் சூர்யா மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்திய பின்பு அந்த பெண்களுடன் விடுதியில் அறை எடுத்து தனிமையிலிருந்து வந்ததும் அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தனிமையிலிருந்த வீடியோவை செல்போனில் வைத்திருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மோசடி மண்ணன் சூர்யாவால் பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக இளம் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடைய இச்சைக்கு இணங்கவைத்து ஏமாற்றிப் பல லட்சங்களையும், சுமார் 100 சவரனுக்கு மேலான தங்க நகைகளையும் மோசடி செய்து வந்துள்ளார் இந்த மோசடி மண்ணன் சூர்யா. இந்த சம்பவம் குறித்து போலீசார் பெங்களூரில் உள்ள சூர்யாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து அவர்களை கானத்தூர் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார்கள்.
அப்போது சூர்யாவின் பெற்றோர் மாதந்தோறும் எங்களுக்குப் பணம் அனுப்புவான், அந்த பணம் ரியல் எஸ்டேட் செய்து சம்பாதிப்பதாகக் கூறினான் என்று போலீசாரிடம் தெரிவித்தார்கள். ஆனால் ''உங்களுக்குக் கிடைத்த பணம் பல பெண்களுடன் தனிமையில் இருந்துவிட்டு அவர்களை மிரட்டிப் பறித்த பணம்'' என்பதை காவல்துறையினர் சூர்யாவின் பெற்றோரிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட அவர்கள் இந்த பணத்தையா எங்களுக்கு அனுப்பி வைத்தாய் எனக் கதறித் துடித்தார்கள்.
சூர்யாவின் தந்தை மத்திய உளவுத்துறையான Intelligence Bureauவில் கண்காணிப்பாளராக (SP) யாக பணிபுரிந்து வருவதாகவும், அவருடைய தாய் பேராசிரியராக பணிபுரிந்து தற்பொழுது ஓய்வுபெற்று இருப்பதும் தெரியவந்தது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய உளவுத் துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் தந்தை தனது மகன் என்ன செய்கிறான் என்பதைக் கண்காணிக்காமல் விட்டதன் விளைவு இன்று சிறை கம்பியை எண்ணப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் சூர்யா.