'மகன் வண்டியில இருந்து விழுந்தது கூட தெரியல...' 'செம போதையில் பைக் ஓட்டிய அப்பா, கடைசியில்...' பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 20, 2020 05:47 PM

பைக்கின் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தை கீழே விழுந்தது கூட தெரியாமல் மது போதையில் இருந்த அப்பா வண்டியை ஓட்டி சென்ற சம்பவம் அரியலூர் பகுதி மக்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

drunken father was unaware of his son slipped from bike

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இருக்கும்  திருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். நேற்று குடும்பத்தோடு உறவினரின் தூக்க வீட்டிற்கு சென்ற செல்வம், காரியங்கள் முடிந்த பின் மூக்கு முட்ட குடித்துள்ளார்.

மது போதையில் உச்சம் அடைந்த செல்வம் தன் 5 வயது மகன் அன்பு அமுதனுடன் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். மது மயக்கத்தில் சுயநினைவின்றி இருந்த செல்வம் புதுச்சாவடி அருகே வந்தபோது, இருசக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்த அன்பு அமுதன் வழுக்கி கீழே விழுந்துள்ளார்.

பைக்கில் இருந்து விழுந்ததில் வேகத்தில் அமுதனின் தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கசிந்து மயக்கநிலையில் சாலையில் கிடந்துள்ளான். இதை அறியாத செல்வம் எப்போதும் போல எவ்வித கவனமும் இல்லாமல் பைக்கை ஓட்டி சென்று சிறிது தொலைவில் இருந்த முட்புதருக்குள் விழுந்துள்ளார்.

குழந்தை சாலையில் இருப்பதை பார்த்த சின்னம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழந்தையை காப்பாற்றி அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தந்தையின் இந்த பொறுப்பற்ற செய்கை அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.