'குரூப்-4' முறைகேடு விசாரணை முடிவு... அத்தன பேரும் ஃபிராடு பசங்க சார்... 99 பேரும் தகுதிநீக்கம்-வாழ்நாள் தடை...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 24, 2020 11:59 AM

குரூப்-4 முறைகேடு புகாரில் 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்ததோடு அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

Disqualification of 99 applicants in the Group-4 abuse complaint

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில்,  முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 35 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது, தேர்வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் முதல் 100 இடங்களுக்குள் 35 இடங்களை பிடித்தவர்களை நேரடியாக அழைத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் முதற்கட்டமாக ராமேஸ்வரம், கீழக்கரை விசாரணை நடத்தினர். இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து டி.என்.பி.எஸ்.சி அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Tags : #GROUP 4 EXAM #DISQUALIFICATION #ABUSE COMPLAINT #LIFETIME BAN