"அவரா பண்ண சான்ஸ் இல்ல, ஏதோ ஒண்ணு நடந்துருக்கு".. டான்சர் ரமேஷ் மரணத்தில் உருவான மர்மம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிக் டாக் மற்றும் சமூக வலைத்தளம் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆன டான்சர் ரமேஷ் உயிரிழந்து போனது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Image Credit : Zee Tamil
சென்னையை சேர்ந்த இவர், தெருக்களில் நடனமாடி அதன் மூலம் பிரபலம் அடைந்து பிரபல தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராகவும் களமிறங்கி இருந்தார்.
தொடர்ந்து தனது நடன திறமையால் ஒரு சில திரைப்படங்களிலும் தோன்றி இருந்தார் டான்சர் ரமேஷ். சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும் தோன்றி இருந்தார்.
இந்த நிலையில், தனது பிறந்த நாள் தினமான நேற்று (27.01.2023) டான்சர் ரமேஷ் மறைந்துள்ளார். இது தொடர்பாக வெளியாகி இருந்த முதற்கட்ட தகவல்களின் படி, சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த டான்சர் ரமேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கணவர் டான்சர் ரமேஷ் மறைவு குறித்து பேசி இருந்த அவரது முதல் மனைவி, "சாயங்காலம் 5:00 மணிக்கு தான் எனக்கு தெரியும், முதல்ல நம்பல நானு. அப்புறம் அக்கா ஒருத்தர் கிட்ட போன் குடுத்து பேசும்போது அவங்க கண்ணீர் விட்டதுக்கு அப்புறம் தான் உண்மைன்னு தெரிஞ்சது. எங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் அவரு உடலை பார்க்க வெச்சாங்க, ஆனா நான் பாக்கல. போலீஸ் வந்து விசாரிச்சப்போ என்னோட வீட்டுக்காரர் இறந்தது சந்தேகமா இருக்கு. அவரா இந்த முடிவு எடுத்தால் பிரச்சனை இல்ல ஆனா வேற ஏதாவது காரணமா இருந்தா கண்டிப்பா நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட ஆள பிடிக்கணும்ன்னு போலீஸ் கிட்ட சொன்னேன். அவங்களும் பண்றேன்னு சொல்லி இருக்காங்க.
Images are subject to © copyright to their respective owners
போன மாசம் தான் நான் அவரை கடைசியாக பார்த்தது, அதுக்கப்புறம் நான் இதுவரைக்கும் அவரை பார்க்கலை. நான் போன் பண்ணா அவருக்கு ஸ்விட்ச் ஆப்ன்னு வரும். என்னால அவரை கண்டுபிடிக்க முடியல. அவர் கூட இந்நாள் வரைக்கும் பேசவும் முடியல. அவரா பண்ணி இருக்கிறதுக்கு சான்ஸ் இல்ல ஏதோ ஒண்ணு நடந்திருக்கு" என மனைவி தெரிவித்துள்ளார்.
முதலில் டான்சர் ரமேஷ் விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்பட்டு வரும் சூழலில், அவரது தாய் மற்றும் முதல் மனைவி ஆகியோர், அவரது மறைவில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளது, சற்று பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.