'மே மாதத்திற்கு கரண்ட் பில் வரவில்லையா'?... 'கவலை வேண்டாம்'... பொதுமக்களுக்கு மின்வாரியத்தின் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கணக்கெடுத்துக் குறித்துக் கொள்வது வழக்கம்.

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கணக்கெடுத்துக் குறித்துக் கொள்வார். வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதனடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவார்கள்.
இந்த சூழ்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் மே மாதம் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என்றால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும், ஒருவேளை 2019 மே மாதத்திற்குப் பிறகு மின் இணைப்பு பெற்றிருந்தால் கடந்த மார்ச் மாதத்திற்கான தொகையைக் கட்டலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால் மின்வாரியத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்மீட்டரில் உள்ள அளவை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ஆன்லைனில் பணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
