'சாமி, என்ன வேலை பாத்திருக்கீங்க நீங்க'... 'திருமண வீடியோவை பார்த்து அதிர்ந்துபோன குடும்பம்'... அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 20, 2021 09:15 PM

திருமணத்தை நடத்திவைக்க அழைக்கப்பட்ட புரோகிதர் மனமேடையிலேயே இப்படி ஒரு சம்பவத்தைச் செய்வார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

Telangana Priest Turns Into Thief In Marriage

தெலங்கானாவைச் சேர்ந்த தம்பதியர் ஞானசந்தர் தாஸ்- வசந்தா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 16ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து திருமணத்திற்கு அழைக்கப்பட்ட புரோகிதர் ஒருவர் வேத மந்திரங்கள் முழங்கத் திருமணம் செய்து வைத்தார்.

Telangana Priest Turns Into Thief In Marriage

அப்போது திருமணம் நடந்த மணிமேடையில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்த நிலையில் பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. அந்த நேரம் புரோகிதர் தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ஆகும்.

Telangana Priest Turns Into Thief In Marriage

இந்நிலையில் தாலியில் தங்கமணிக் குண்டுகள் இல்லாததைக் கண்டு திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து திருமண வீடியோவில் புரோகிதர் தங்கமணி குண்டுகளைத் தனது பாக்கெட்டில் போடுவது தெளிவாகப் பதிவாகி இருந்ததைப் பார்த்த குடும்பத்தார் அதிர்ச்சியடைந்து அவர் மீது காவல்துறையில் புகார் செய்தனர்.

Telangana Priest Turns Into Thief In Marriage

இதையடுத்து தலைமறைவாக உள்ள புரோகிதரை போலீசார் தேடி வருகின்றனர். கல்யாண வீட்டிலேயே புரோகிதர் கைவரிசை காட்டியுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Telangana Priest Turns Into Thief In Marriage | India News.