'விருப்ப மனு தாக்கல் முன்னாடி அப்பா சொன்ன வார்த்தை'... 'தொண்டர்கள் கண்டிப்பா ஜெயிக்க வைப்பாங்க'... விஜய பிரபாகரன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று கோயம்பேட்டில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் களம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டும் 23 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, பிப். 27 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், இன்னும் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.
அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக, தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே விருகம்பாக்கம் தொகுதிக்கு விஜயகாந்த்தும் தொகுதி குறிப்பிடாமல் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவும் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், தேமுதிக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுத் தாக்கல் செய்தார்.
தொகுதிப் பங்கீடு நிறைவடையாத நிலையில், எந்தத் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பதை விருப்ப மனுவில் குறிப்பிடவில்லை. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய பிரபாகரன், ''தொண்டர்கள் ஆசைப்பட்டதால் மனு தாக்கல் செய்துள்ளேன். இதுதொடர்பாக விஜயகாந்த், 'சென்று வா, வெற்றி நமதே!' என்று தெரிவித்தார். எந்தத் தொகுதியில் நான் நின்றாலும் என்னைத் தொண்டர்கள் ஜெயிக்க வைப்பார்கள் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
