“என் பொண்ணு இனி இல்ல”.. தலை முழுகிய கோலத்தில் ஜேசுரதி பகிர்ந்த பரபரப்பு ஃபோட்டோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 09, 2023 01:11 PM

இன்ஸ்டாகிராமில் ஆடல் பாடல் செய்து பதிவேற்றி பிரபலமானது பிரிக்யாவின் குடும்பம். இந்த பெண்ணின் தாயார், அண்ணன் அவ்வப்போது தந்தை உள்ளிட்ட பலரும் இவர்களது வீடியோவில் வலம் வருவார்கள்.

brikiya mother Jesurathi decision instagram post

Also Read | "பாலைவனம் நடுவுல விமானமா?.. இது எப்படி பாஸ் இங்க?".. 20 வருஷம் கழிச்சும் நீடிக்கும் மர்மம்?!

பிடித்தமான ஆடல் பாடல்கள் , உரையாடல்கள் என பலவற்றையும் ஜேசுரதி பிரியக்யா என்கிற இன்ஸ்டா கணக்கில் பதிவேற்றும் இவர்களுக்கு எண்ணற்ற ஃபாலோயர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில்தான், பிரிக்யாவின் தாயார் சில நாட்களுக்கு முன்பாக, “என் மகளுக்கும் மகனுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரி செல்லம் கொடுத்து வளர்த்தேன். எங்கள் குடும்பத்தினரிடம் பலரும் சரிவர பேசுவதில்லை. உறவினர்கள் பிணைப்பில் இல்லை. என்னுடைய கோடீஸ்வர தம்பி கூட பேசுவதில்லை. இந்த நிலையில் எங்களுடைய மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஒரு வருட காலமாக மகளுக்கும் மருமகனுக்கென்றும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தோம். மகளும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார். அவருக்கு மாப்பிள்ளையை பிடித்திருந்தது. இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்று வந்தனர் . இருவரும் சேர்ந்து கூட ரீல்ஸ் வீடியோக்களைச் செய்தனர். ஆனால் இதனிடையே யாரோ என் மகளை ஏன் உடனடியாக திருமணம் செய்கிறீர்கள்? நீங்கள் இன்னும் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் என்பது போல் சொல்லி குழப்பி விட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது.

இதனால் என் மகள் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். இத்தனை நாள் என் குடும்பத்தை தவறாக பேசியவர்களுடன் என் கணவரும் மகளும் சென்று விட்டனர்.” என்று உருக்கமாக பேசியிருந்தார். மேலும், சில மாதங்களாகவே தன் கணவரும் மகளும் தன்னை வந்து பார்க்கவில்லை, தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டுள்ள இவர்,  இன்னும் கொஞ்ச நாட்களில் தன்னுடைய 25 வது திருமண ஆண்டை கொண்டாடுவதற்காக திட்டமிட்டு வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக தன் கணவரை ஒரு நாள் கூட பிறந்ததில்லை என்றும் தற்போது தன்னைவிட்டு பிரிந்து போய்விட்டதால் தான் தனிமையில் இருப்பதாக அழுதவர், தன்னுடைய திருமண நாளுக்குள் கணவர் திரும்ப வரவேண்டும் என்றும் உருக்கமாக கோரிக்கை வைத்திருதார். இந்நிலையில், தன் மகளை தலைமுழுகிவிட்டதாக, தலையில் தண்ணீர் ஊற்றிய நிலையிலான புகைப்படம் வெளியிட்டு ஏற்படுத்தியுள்ளார் பிரிக்யாவின் தாயார் ஜேசுரதி.

இதனிடையே ஜேசுரதியின் மகனும், பிரிக்யாவின் சகோதரருமானவர் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, அவரும் அவரது மனைவியும், பிரிக்யாவின் தாயார் ஜேசுரதியுடன் ஒன்றாக வசித்து வருவதுடன் அனைவரும் ஒன்றாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவேற்றி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் பிரிகாவின் சகோதரரும் இதுகுறித்து உருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது,

Also Read | தன்னை பாராட்டி கோலி போட்ட போஸ்ட்.. பாத்துட்டு சூரிய குமார் யாதவ் கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!

Tags : #BRIKIYA MOTHER JESURATHI #BRIKIYA JESURATHI ISSUE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Brikiya mother Jesurathi decision instagram post | Tamil Nadu News.