'சென்னை ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தி கிடையாது'...'பிரபல நிறுவனம் அதிரடி'...ஊழியர்கள் கலக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Sep 09, 2019 03:34 PM

இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை பல்வேறு துறைகளை வெகுவாக பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாகனத்துறை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன. அத்துடன் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன.

Ashok Leyland announces non working days at 5 plants

இந்நிலையில் சென்னை எண்ணூரில் செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. அத்துடன் ஓசூரில் உள்ள 1 மற்றும் 2ஆவது உற்பத்தி மையங்களை 5 நாள்கள் மூடுவதாகவும் அறிவித்துள்ளது. இது ஊழியர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது தொடர்பாக தேசிய பங்குச் சந்தைக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

இதனிடையே ராஜஸ்தானின் அல்வாரில் தலா 10 நாள்களும், உத்ராகண்ட் பந்த்நகரில் 18 நாள்களுக்கும் உற்பத்தி  நிறுத்துவதாகவும் அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விற்பனையில் நிலவும் சரிவே இந்த முடிவுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : #ASHOK LEYLAND #AUTO SLOWDOWN #PLANTS