'நிஜமாவே நீங்க பொண்ணு தானா'?... 'அப்போ, இத செஞ்சிட்டு பிளைட்ல ஏறுங்க'... விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீங்கள் பெண் என்பதை நிரூபித்து விட்டு விமானத்தில் ஏறுங்கள் என விமானநிலைய ஊழியர்கள் கூறியுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல பளுதூக்கும் வீராங்கனை அன்னா துரேவா. இவர் உலக அளவில் நடைபெற்ற பல்வேறு பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தனது நாட்டிற்காகத் தங்கம் வென்றதோடு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பல சாதனைகளைப் படைத்தது ரஷ்யாவிற்குப் பெருமைகளைப் பெற்றுத் தந்துள்ளார். அவருக்குச் சமீபத்தில் நடந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்னா தனது சொந்த நகரமான krasnodarக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக மாஸ்கோ வழியாகச் செல்லும் விமானத்தில் தனது இருக்கையை முன்பதிவு செய்துள்ளார். விமானம் ஏறுவதற்காக விமான நிலையம் வந்த அன்னாவிடம், சோதனைகளை மேற்கொண்ட விமான நிலைய ஊழியர்கள், நீங்கள் பெண் தான் என்பதில் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது எனக் கூறியுள்ளார்கள். இதைக் கேட்டு அதிர்ந்துபோன அன்னாவிடம், நீங்கள் பெண் தான் என்பதை நிரூபித்து விட்டு விமானத்தில் ஏறுங்கள் என அனைத்து பயணிகள் முன்பும் கூறியுள்ளார்கள்.
சக பயணிகள் முன்பு அன்னாவிடம் விமான நிலைய ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய அன்னா, ''சக பயணிகள் முன்பு என்னைப் பெண் என நிரூபியுங்கள் என கூறி என்னை அவமானப்படுத்தியதை நினைக்கும் போதே எனது மனது வலிக்கிறது. நான் யாரிடமும் என்னைப் பெண் என நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கடந்த வருடம் தன்னை தன் பாலின ஈர்ப்பாளராக அறிவித்துக்கொண்ட அன்னா, விமான நிலைய ஊழியர்களிடம் அதை பொறுமையாக எடுத்துரைத்ததாகக் கூறியுள்ளார்.
இதற்கிடையே பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின்பே அன்னா விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது இளமைக் காலம் முழுவதும் நாட்டிற்காக ரத்தமும், வியர்வையும் சிந்திய ஒருவரிடம் இப்படியா நடந்து கொள்வது எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்நிலையில் தனது விமானச் சேவை ஊழியர்கள் அன்னாவிடம் நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகச் சம்மந்தப்பட்ட விமானச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நிகழாது என உறுதியும் அளித்துள்ளது.
பளுதூக்கும் போட்டிகளில் 6 முறை உலக சாதனை படைத்துள்ள அன்னா, தற்போது பளுதூக்கலில் ஆர்வம் கொண்ட பல இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்.