"நல்லா இருக்கான்னு நான்தான் சொல்லுவேன்".. CHEF தாமுக்கே அல்வா கொடுத்த எதிர்நீச்சல் ஜான்சி ராணி.. EXCLUSIVE..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சின்னத்திரை நடிகை காயத்ரி கிருஷ்ணன் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். இதில், காயத்ரி சமையல் செய்ய, அதனை தாமு டேஸ்ட் செய்து கலகலப்பாக கமெண்டும் அடிக்கிறார்.

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.
இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம், காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் மெகாதொடரான எதிர் நீச்சல், ஜனனி, குணசேகரன், சக்தி, கதிர், நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா, ஞானசேகரன், ஜான்சி ராணி எனும் கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான கதையாக அமைந்துள்ளது. ஆணாதிக்கம், பெண் உரிமை ஆகியவற்றை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் கரிகாலனின் அம்மாவாக ஜான்சி ராணி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி கிருஷ்ணன். இந்நிலையில் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார் காயத்ரி. அதில் தனது பேவரைட் உணவான கேரட் அல்வா மற்றும் கத்திரிக்கா பிட்லை ஆகியவற்றை செய்கிறார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல chef தாமு அவை தயாரிக்கப்பட்ட விதம் குறித்து கேட்டறிகிறார். அதன் பின்னர், காயத்ரியை அந்த உணவுகளை டெஸ்ட் செய்து பார்க்கும்படி சொல்லும் தாமு, தான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனவும் கலகலப்புடன் கூறுகிறார்.
இதனையடுத்து, அதனை காயத்ரி ருசி பார்க்கிறார். அப்போது, "நல்லா இருக்கான்னு நான்தான் சொல்லுவேன்" என புன்னகையுடன் கூறிய தாமு, அந்த உணவுகள் குறித்த தனது கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

மற்ற செய்திகள்
