உங்களுக்கு கொரோனா வைரஸ் பத்தி தெரியுமா...? 'முறையான சுகாதார கைகழுவுதல் செய்த சிறுவன்...' உலக அளவில் ட்ரெண்டிங் ஆகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 23, 2020 07:01 PM

ஊட்டி அருகே உள்ள ஒரு மலைகிராம சிறுவன் கொரோனா வைரஸ் குறித்து தெரிந்து வைத்தது மட்டுமல்லாமல், முறையான சுகாதார கைகழுவுதலையும், அதனை முறையாக செய்து காண்பித்து உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

A video of a proper sanitary hand washing boy is going viral

நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் தற்போதையை தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை மேலாண்மை இயக்குநருமான சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் தனது வழக்கமான பணிக்காக ஊட்டி அருகில் உள்ள இத்தலார் தேயிலை தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார்.

செல்லும் வழியில் மூன்று சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதைக் கண்ட சுப்ரியா சாஹூ, அந்த சிறுவர்களிடம், `என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?,’ என கேட்டுள்ளார். 'விடுமுறை என்பதால் விளையாடிக்கொண்டிருக்கிறோம்', என பதிலளிக்க, ’கொரோனா வைரஸ் குறித்து உங்களுக்கு தெரியுமா’ என இவர் கேட்க, கொரோனா வைரஸ் பற்றின தெளிவான விளக்கத்தை சிறுவர்கள் அளித்துள்ளனர்.

மேலும் மற்றொரு சிறுவன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முறையாக கைகழுவுவது எப்படி என்பதை செய்து காண்பித்துள்ளான். இந்த வீடியோவை டிவிட்டரில் சுப்ரியா சாஹூ பதிவிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது உலக அளவில் டிரெண்டாகி வருகிறது. மேலும் உலக சுகாதார அமைப்பின் முதன்மை இயக்குநர் இந்த சிறுவனை வாழ்த்தி ரீட்வீட் செய்துள்ளார்.

இது குறித்து சுப்ரியா சாஹூ கருத்து தெரிவிக்கையில், ``தமிழகத்தில் உள்ள ஒரு மலைக்கிராமத்தில் வாழக்கூடிய சிறுவர்கள் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்பது சாதாரண செயல் அல்ல. தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் இது சம்பந்தப்பட்ட அனைத்து அரசுத்துறைகள் என கூட்டாக இணைந்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் சாதனை இது" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : #HANDWASH