'ஸ்வீட் கொடுக்க வந்த பெண் ஊழியரை...' 'அறையின் ஓரமாக அழைத்து சென்று...' 'என்ன பண்ணினார்'னு சிசிடிவி காட்டி கொடுத்துடுச்சு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 18, 2020 08:00 PM

பிறந்த நாளுக்கு இனிப்பு கொடுத்து வாழ்த்து பெற வந்த அலுவலக பெண் ஊழியருக்கு முத்தம் கொடுத்த அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

A officer kissing employee came to give sweet for birthday

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் கோபிநாத் என்பவர் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் ஒருநாள்  பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் ஒருவர் தனக்கு பிறந்தநாள் என்றுகூறி கையில் இனிப்புடன் கோபிநாத்தின் இருக்கைக்கு வந்தார்.

அப்போது கோபிநாத்துடம் பேசிக்கொண்டிருந்த மற்றொரு நபரை வெளியே அனுப்பிய கோபிநாத், அந்த பெண்ணை அறையின் ஓரமாக அழைத்துச் சென்று முத்தம் கொடுத்தார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமீப நாட்களாக வாட்சப்பில் வந்துள்ளது. இதையடுத்து கோபிநாத்துடன் விசாரணை நடத்திய பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜ், கோபிநாத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

பெண்கள் வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகள் பாலியல் ரீதியாக சீண்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அலுவலகத்துக்குள் சிசிடிவி பொறுத்தப்பட்டிருப்பதை கூட பொருட்படுத்தாமல் இப்படி சில்மிஷத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags : #SWEET