'குற்றம் செய்யாம 30 வருஷமா ஜெயில்ல'.. 'தாயின் 30 வருட போராட்டம்'.. ‘ரஜினி’ பட இளம் இயக்குநரின் ‘உருக்கமான கோரிக்கை!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது கண்ணீர் சிந்தினார்.
இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இணையதளங்களில் பாடல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த பாடலை இணையதள வாசிகள் 'ரிலீஸ் பேரறிவாளன்' என்ற ஹேஸ்டேகுகளின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.
30 years of Jail for a man who never committed the crime..
30 years of Struggle of a Mother to get his Son back..
Request our @CMOTamilNadu & Governor to give Justice to them 🙏
Please Let the Mother & Son live a free Life atleast from now..#ReleasePerarivalan @ArputhamAmmal pic.twitter.com/kc7wa4FLVs
— karthik subbaraj (@karthiksubbaraj) November 20, 2020
இந்நிலையில் பீட்சா, பேட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பதிவில், “குற்றம் புரியாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டு சிறைவாசம். மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்... பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.