ஜஸ்ட் மிஸ்: யுவராஜ் சிங் சாதனையை காலி பன்னிருப்பாரு.. அதிவேக அரைசதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Pandidurai T | Feb 17, 2022 04:32 PM

வங்கதேச பிரிமீயர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் 13 பாலில் அரைசதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

West Indies batsman hits a fifty off 13 balls in the BBL 2022

2007 ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பை போட்டியில்  இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் 6 சிக்சர்கள் விளாசி உலத்தையை திரும்பி பார்க்க வைத்தவர் யுவராஜ் சிங். அவர் செய்த சாதனைதான் இன்று வரை முதலிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் சுனில் நரேன், வங்காளதேச பிரீமியர் லீக் போட்டியில் அதிவேக அரைசதம் விளாசி இரண்டாம் இடத்தை பிடித்துசாதனை படைத்துள்ளார்.

வங்கதேச பிரிமீயர் லீக்

வெஸட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சுனில் நரைன், ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், வங்கதேச பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் கோமில்லா விக்டோரியன்ஸ் அணிக்காக ஆடிவரும் சுனில் நரைன், 13 பந்தில் அரைசதம் அடித்தார். வங்கதேச பிரீமியர் லீக் தொடரின் 2வது தகுதிச்சுற்று போட்டியில் சாட்டாக்ரோம் சேலஞ்சர்ஸ் மற்றும் கோமில்லா விக்டோரியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 148 ரன்கள் அடித்தது.

சுனில் நரைன் காட்டடி

பின்பு 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விக்டோரியன்ஸ் அணி நரைன் 16 பந்துகளில் 57 ரன்கள் எடுத்ததன் மூலம் 7 ​​ஓவர்களுக்கும் மேலாக மீதம் வைத்து வெற்றியைப் பெற்றது. ஆல்-ரவுண்டரின் நரைனின் இந்த அதிரடியில் ஆறு சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். 13 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்தார். அவரது அதிரடியால் எளிதாக வெற்றி பெற்ற விக்டோரியன்ஸ் அணி  ஃபைனலுக்கு முன்னேறியது. 13 பந்தில் அரைசதம் அடித்ததன் மூலம், டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச டி20 மற்றும் டி20 லீக் தொடர்கள்) 2வது அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் சுனில் நரைன்.

இறுதிப்போட்டிக்கு தகுதி

அவரது முழு ஆட்டத்திலும், நரைன் இரண்டு டாட் பால்களை மட்டுமே விளையாடினார். ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் விக்டோரியன்ஸ் அணியை நரைனின் அட்டகாசத்திற்குப் பிறகு வெற்றிக்கு எளிதாக்கினர். ஐபிஎல் 2022ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சேரும் டு பிளெசிஸ் 23 பந்துகளில் 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மொயீன் அலி 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் விளாசினார். சுனில் நரைன அதிவேகத்தில் அரைசதம் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதங்கள்:

  1. யுவராஜ் சிங்: 12 பந்துகள் - 2007ல் இந்தியா vs இங்கிலாந்து
  2. கிறிஸ் கெய்ல்: 12 பந்துகள் - 2016ல் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் எதிராக அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்
  3. ஹஸ்ரதுல்லா ஜசாய்: 12 பந்துகள் - 2018 இல் காபூல் ஸ்வானன் vs பால்க் லெஜண்ட்ஸ்
  4. மார்கஸ் ட்ரெஸ்கோதிக்: 13 பந்துகள் - 2010 இல் சோமர்செட் vs ஹாம்ப்ஷயர்
  5. சுனில் நரைன்: 13 பந்துகள் - 2022 இல் கொமிலா விக்டோரியன்ஸ் எதிராக சட்டோகிராம் சேலஞ்சர்ஸ்  

 

 

Tags : #SUNI NARINE #BBL2022 #FASTEST FIFTY #WORLD RECORD #T20 MATCH #WEST INDIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. West Indies batsman hits a fifty off 13 balls in the BBL 2022 | Sports News.