பிரபல நடிகையின் ஃபோட்டோவுக்கு.. வெங்கடேஷ் போட்ட கமெண்ட்.. அவங்க குடுத்து 'REPLY' தான் ஹைலைட்டே..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுந்தைய ஐபிஎல் தொடர்களை போல, தற்போது நடைபெற்று வரும் 15 ஆவது ஐபிஎல் தொடரும், ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் ஆடி வருவதால், இதில் தங்களின் திறமையை வெளிக்காட்டி, இந்திய அணிக்காகவும் பலர் ஆட வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டு, டி 20 உலக கோப்பையும் உள்ளதால், இந்த ஐபிஎல் தொடரில் கவனம் பெறும் இளம் வீரர்கள் பலர், இந்திய அணியில் தேர்வாகவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இளம் வீரர் வெங்கடேஷ்
இதனால், தங்களின் முழு திறனை வெளிப்படுத்தி, தீவிரமாக பல இளம் வீரர்கள் தயாராகி வருகின்றனர். அப்படி, ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி, இந்திய அணிக்காக களமிறங்கியவர் தான் வெங்கடேஷ் ஐயர். கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், தன்னுடைய அசாத்தியமான ஆட்டத்தால், இந்திய அணிக்காகவும் ஆடினார்.
நடிகையின் பதிவில் கமெண்ட்
உலக கோப்பை தொடரிலும், அவர் களமிறங்கலாம் என கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகிகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகை ஒருவரின் இன்ஸ்டாகிராம் பதிவில், வெங்கடேஷ் ஐயர் செய்துள்ள கமெண்ட், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'டாக்சிவாலா', இதை தவிர திம்மரசு, கமணம் உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளவர் பிரியங்கா ஜவல்கர். திரைப்படங்களில் ஒரு பக்கம் கவனம் செலுத்தும் பிரியங்கா, இன்னொரு பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக உள்ளார்.
அதே போல, பிரியங்கா பதிவிடும் பல புகைப்படங்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாவதும் உண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பிரியங்கா ஜவல்கர் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியலும் அதிகம் பகிரப்பட்டு வந்திருந்தது.
பிரியங்கா கொடுத்த 'Reply'
இதனிடையே, இளம் கிரிக்கெட் வீரரான வெங்கடேஷ் ஐயர், பிரியங்காவின் புகைப்படத்தில், "Cute" என கமெண்ட் செய்துள்ளார். இதனை கவனித்த பிரியங்கா ஜவல்கர், "யாரு? நீங்களா?" என ரிப்ளை செய்துள்ளார். இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாக தொடங்கி உள்ளது.
அதே போல, கிரிக்கெட் வீரரின் கமெண்ட் குறித்தும், பல விதமான கருத்துக்களை, பிரியங்கா ஜவல்கரின் புகைப்படத்தின் கீழ், அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் வெங்கடேஷ் ஐயருக்கு, பிரபல WWE ஸ்டார் செத் ரோலின்ஸ், ஐபிஎல் தொடருக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
