IND VS PAK: கமெண்ட்ரியில் களமிறங்கிய ப்ரின்ஸ் சிவகார்த்திகேயன்.. சூப்பர் ஸ்டார் மாதிரி ஒன்னு சொன்னாரு பாருங்க.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை டி20 போட்டியில் இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் வர்ணனையாளராக இணைந்திருக்கிறார்.

இந்த வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மேல்போர்னில் துவங்கி இருக்கிறது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார். அதனை தொடர்ந்து இரண்டாவது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்தியிலேயே பாபர் ஆசம் விக்கெட்டை தூக்கினார். இதனை தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் விக்கெட்டை நான்காவது ஓவரில் வீழ்த்தி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் அர்ஷ்தீப் சிங்.
இந்நிலையில், இந்த போட்டியில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் வர்ணனை செய்து வருகிறார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரலில்,"கண்ணுங்களா நீங்க பாத்துகிட்டு இருக்கது இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை டி20 போட்டி" என்றார்.
இதனையடுத்து, அனைவர்க்கும் தனது தீபாவளி வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம், கதாநாயகனாக அறிமுகம் ஆனார் சிவகார்த்திகேயன். அதனை தொடர்ந்து மனம் கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் ஆகிய படங்களின் மூலம் ஏராளமான மக்களிடையே அவர் கதாநாயகனாக பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை அளித்தன.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ப்ரின்ஸ் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கியுள்ளார்.

மற்ற செய்திகள்
