ரிஸ்வான் 'ஐசியூ'ல அட்மிட் ஆயிருந்தப்போ 'அந்த விஷயத்தை' மட்டும் திரும்ப திரும்ப சொல்லிட்டே இருந்தார்...! 'இப்படியொரு' பிளேயரா...? - 'நெகிழ்ந்து' போன இந்திய டாக்டர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் வீரர் முகம்மது ரிஸ்வான் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு, மிக வேகமாக மீண்டு வந்து விளையாடப் போனதுதான் பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
டி-20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் பலப்பபரீட்சை நடத்தியது. இதில் ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் ரிஸ்வான் சிறப்பாக ஆடி 52 பந்துகளில் 67 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார். ஆனால் அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால், போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
போட்டி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் ரிஸ்வானுக்கு விட்டு விட்டுக் காய்ச்சல் அடித்தது. எந்நேரமும் இருமிக் கொண்டே இருந்தார். கூடவே நெஞ்சும் கட்டிக் கொண்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின் நுரையீரல் இறுக்கம் குறைக்கப்பட்டு எளிதாக மூச்சு விட வழி செய்யப்பட்டது. அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இப்படி தொற்று ஏற்பட்டால், மூச்சு சரியாக விட முடியாது, நெஞ்சு நன்றாக வலிக்கும். இந்த நெஞ்சு வலி சில நிமிடம் முதல் பல மணி நேரம் வரை தொடர்ந்து இருக்கும்.
அவரை ஐசியூவில் சேர்த்தது முதல் ஒரு டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. அவருக்கு சிகிச்சை அளித்த குழுவில் இடம் பெற்றிருந்தவர்தான் இந்தியரான டாக்டர் சஹீர் சைனுலாப்தீன். ரிஸ்வானுக்கு அளித்த சிகிச்சை குறித்து சஹீர் தற்போது பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
டாக்டர் சஹீர் இதுகுறித்து கூறுகையில், ரிஸ்வானுக்கு தொற்று மிகவும் கடுமையாக இருந்தது. அரையிறுதிப் போட்டிக்கு முன்பு உடல்நிலை தேறுவது கடினமாக இருந்தது. அப்படி ஒரு நிலையில் இருந்தார். இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டால் குணமாக குறைந்தது கண்டிப்பாக ஒரு வாரமாவது ஆகும்.
ஆனால், ரிஸ்வான் தான் மீண்டும் விளையாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நான் விளையாட வேண்டும், எங்கள் அணியுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவர் தன்னுடைய வலியை தாங்கிக் கொண்டார். அவரது மன உறுதியை கண்டு மிரண்டு விட்டோம். அந்த மன உறுதி தான் அவரை விரைந்து குணப்படுத்தியது. சிகிச்சையின்போது தன்னைப் பற்றி ஒருத்துளி கூட கவலைப்படவே இல்லை. அரையிறுதி போட்டியை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்.
அவர் ஆடுகளத்தில் இறங்கி சிக்ஸர்களைப் பறக்க விட்டதைக் கண்டு வியந்து போனோம். கிட்டத்தட்ட 35 மணி நேரம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ரிஸ்வான். முழுமையாக குணமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ரிஸ்வான் போல ஐசியூ வரை போய், அதிலிருந்து மீண்டு வந்து அரை சதமும் அடித்து அசத்திய கதை இதற்கு முன்பு எங்கையாவது நடந்ததா என தெரியவில்லை. அந்த வகையில் ரிஸ்வான் சாதித்து விட்டார் என்று தான் கூற வேண்டும். மேலும் உடல்நிலை குணமடைந்ததும், டாக்டர் சஹீரைப் பாராட்டும் விதமாக, அவருக்கு தான் கையெழுத்திட்ட ஜெர்சியை கொடுத்துள்ளார் ரிஸ்வான்.