ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு புது கேப்டன்? இதை யாரும் எதிர்பார்க்கலயே.. ரவி சாஸ்திரி பரபர தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பது குறித்து ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.
ஆனாலும் ரோஹித் சர்மாவுக்கு தற்போது வயது அதிகமாக உள்ளதால், அடுத்த கேப்டன் குறித்த பேச்சு இப்போதே தொடங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘இந்த முறை ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருக்கும் இளம் வீரர்களை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் மீது கவனம் திரும்பியுள்ளது. இதில் ரிஷப் பந்த்துக்கு கிரிக்கெட் சார்ந்த அறிவு அதிகமாக உள்ளது. நீண்ட காலத்துக்கு செயல்பட கூடிய இளம் கேப்டன் தேவை தற்போது உள்ளது. அதனால் புதிய கேப்டன் குறித்து முடிவு செய்ய தேர்வுக் குழுவினருக்கு ஐபிஎல் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது’ என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 4 மாதங்களில் ஆஸ்திரேலிய நடைபெற உள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசும் வீரர்களை தேர்வு குழுவினர் கவனித்து வருகின்றனர். கிரிக்கெட் வர்ணனைக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. சில விதிகளால் கடந்த 5 ஆண்டுகளாக வர்ணனை செய்ய முடியாமல் இருந்தது வேதனையளித்தது’ என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
