"என்னய்யா சிரிச்சிட்டு இருக்கும் போதே... பொசுக்குன்னு மூஞ்சில கைய வச்சுட்ட...???" இலங்கை அணியில் நடந்த சம்பவம்... வைரல் 'வீடியோ'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Behindwoods News Bureau | Jan 17, 2021 10:59 PM

இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

dickwella mistakenly slaps his teammate during celebration

நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ள நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 36 ரன்களே தேவை. இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தின் போது, ஜோ ரூட் ரன் அவுட்டான நிலையில், அதனைக் கொண்டாட இலங்கை வீரர்கள் ஒன்று கூடினர். அப்போது இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா, சக வீரரான ஹசரங்காவிடம் மகிழ்ச்சியில் ஹை ஃபை கொடுக்க முயன்ற நிலையில், தவறுதலாக டிக்வெல்லாவின் ஹசரங்கா முகத்தில் சற்று வேகமாக பட்டது.

 

ஹசரங்காவிற்கு எந்தவித காயமும் ஏற்படாத நிலையில், இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கேட் க்ராஸ் இதனை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dickwella mistakenly slaps his teammate during celebration | Sports News.