'ஸ்ட்ரச்சரில் ஏற்றியபோது கதறிய ரசிகர்கள்'.. மைதானத்தில் 'பிரபல வீரருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Sep 13, 2019 12:58 PM

இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்களின் தலைகள் அசால்ட்டாக குறிவைக்கப்படுகின்றன. சமீபத்தில் பண்ட்யா சகோதரர்கள் கூட தலைக்கு குறிவைத்து பவுலிங் போடுவதை விளையாட்டாகச் செய்து, வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். அந்த அளவில் பேட்ஸ்மேன்களின் தலைக்கு ஆபத்துகள் இருக்கின்றன.

brutal blow of Jamaica Tallawahs hit in Andre Russell head

ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா வீசிய பந்துகளும் சரி,  ஆஷஸ் தொடரில் ஆர்ச்சர் வீசிய பந்துகளும் சரி பவுலர்களை பதம் பார்த்த நிகழ்வுகள் என பலவற்றையும் இதற்கு உதராணமாய் சொல்லும் அளவுக்கான சூழல் கண் முன்னே இருக்கிறது. முன்னதாக ஸ்மித்துக்கு ஆர்ச்சர் எரிந்த பந்தினால், ஸ்மித் காயம் அடைந்து முதல் போட்டியையே விளையாட முடியாமல் போனது.

இந்த நிலையில் ஜமைக்கா தல்லாவாஸ்க்கும் செயிண்ட் லூசியா அணிக்கும் இடையே நிகழ்ந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில், ஜமைக்கா அணி நிர்ணயித்த 170 ரன்கள் என்கிற இலக்கை 17வது ஓவரிலேயே எட்டியதோடு, அந்த அணியை வீழ்த்திய லூசியா அணியின் பவுன்சர் வில்ஜோயன் வீசியபந்து, 14வது ஓவரில் ஜமைக்கா அணிக்காக விளையாடி ஆண்ட்ரூ ரசலின் ஹெல்மெட் இருக்கும் பகுதியை பதம் பார்த்தது.

இதனால் அங்கேயே சுருண்ட ஆண்ட்ரூ ரசல், பின்னர் ஸ்ட்ரச்சரில் அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த ரசிகர்களை கண்கலங்கச் செய்தது.

Tags : #CPL19 #ANDRERUSSELL #JAMAICA TALLAWAHS