அடுத்தடுத்து வெளியான 'அதிர்ச்சி' தகவல்??.. புவனேஷ்வர் குமாருக்கு வந்த 'சோதனை'!.. "பாவம்ங்க அவரு, இப்போ அடுத்த 'சான்ஸும்' போச்சா??.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், போட்டிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து, செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) மற்றும் அவரது மனைவி ஆகியோர், கொரோனா தொற்றின் அறிகுறிகள் இருப்பதன் காரணமாக, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மே மாதம், புவனேஷ்வர் குமாரின் தந்தை, புற்றுநோய் காரணமாக உயிரிழந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மே 21 ஆம் தேதியன்று, புவனேஷ்வரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, வீட்டிலுள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அவர்களுக்கு நெகடிவ் என முடிவுகள் வந்துள்ளது.
இதனிடையே, புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது மனைவி நுபுர் ஆகியோருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும், இதற்காக அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும், அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் 5 டெஸ்ட் போட்டித் தொடரிலும், புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எனினும், ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் டி 20 தொடரில் புவனேஷ்வர் குமாருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஒருவேளை அவருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில், அவர் இலங்கை தொடரிலும் பங்கேற்பது கடினமாகலாம்.
அடுத்தடுத்து காயத்தால் அவதிப்பட்ட புவனேஷ்வர் குமார், கடந்த 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு, எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆடவில்லை. அவ்வப்போது, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டு வரும் நிலையில், சமீபத்தில் பாதியில் நின்ற ஐபிஎல் போட்டிகளிலும், அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பை போட்டியில், புவனேஷ்வர் குமார் இடம்பெற வேண்டுமென்றால், இலங்கை தொடரிலும், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளிலும், தனது பழைய ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.