"என்னதான் பெரிய பிளேயரா இருந்தாலும்.. என் அம்மா இத பத்தி கேட்டுட்டே இருப்பாங்க".. 14 வருஷத்துக்கு அப்புறம் டிகிரி.. ஷகிப் அல் ஹசன் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன் 14 வருடங்களுக்கு பிறகு தற்போது டிகிரி வாங்கியிருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
டிகிரி
பொதுவாக கல்வி மட்டுமே நிலையான செல்வம் என பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆரம்ப நாட்களில் தங்களது தனித்துவ திறமை மூலம் புதிய உயரங்களை அடைந்தாலும் கல்வியிலும் சாதிக்க வேண்டும் என பலரும் விரும்புவதுண்டு. குறிப்பாக சாதனையாளர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் ஒரு கல்வி பயின்றவர் என சொல்லிக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுவதை நாம் அறிந்திருப்போம். அப்படி ஒரு சம்பவம் வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஹசன் தன்னுடைய டிகிரியை பெற்றிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஷகிப் அல் ஹசன்
வங்கதேச கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் ஷகிப் அல் ஹசன். ஒருநாள் போட்டிகளில் 7000+ ரங்களையும் 300+ விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருப்பவர். சமீபத்திய அயர்லாந்து தொடரில் இவருடைய பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த சூழ்நிலையில் தனது அம்மாவின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்திருக்கிறார் ஹசன்.
Images are subject to © copyright to their respective owners.
வங்கதேசத்தில் உள்ள அமெரிக்கன் சர்வதேச பல்கலைக்கழகத்தில் (AIUB) 14 வருடங்களுக்கு பிறகு டிகிரியை முடித்திருக்கிறார் ஹசன். பிபிஏ பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர் அங்கு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உருக்கமாக பேசியிருக்கிறார். அப்போது தன்னுடைய தாய் நீண்ட காலமாக எப்போது டிகிரி முடிப்பாய் என கேட்டுக்கொண்டே இருந்ததாகவும் தற்போது பெருமையாக இருப்பதாகவும் அவர் பேசியிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
வாழ்த்து
இதுகுறித்து பேசிய அவர்,"நான் என்னுடைய டிகிரியை பெற நீண்ட காலங்கள் தேவைப்பட்டு விட்டது. நான் பேட்டை எடுத்துக் கொண்டு விளையாட செல்லும் போதெல்லாம் என் அம்மா என்னை அழைத்து உன் படிப்பு என்னாச்சு? என கேட்பார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக என்னுடைய பிபிஏ பட்டத்தை முடித்து இருக்கிறேன். எனது அம்மாவை பெருமைப்படுத்தி விட்டேன் என்று நினைக்கிறேன். இது எனக்கு கனவு நனவான தருணம். இங்கு உள்ள அனைவரையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பட்டம் பெற்ற அனைவரும் தங்களது வாழ்க்கையில் பல உயரங்களை அடைய எனது வாழ்த்துக்கள்" என உருக்கமாக பேசியிருக்கிறார். ஷகிப் பட்டம் பெறும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
