UMPIRING BLUNDER : 6 பந்து வீச வேண்டிய ஓவரில் 1 பந்து குறைவாக வீசப்பட்டதா? ஆஸி VS ஆப்கான் T20 WC தொடரில் சர்ச்சையான சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சூப்பர் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரு குழுவாக பிரிக்கப்பட்டு சூப்பர் 12 சுற்றில், 12 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள இன்னொரு அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டியிருக்கும். இறுதியில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இதன் ஒரு அங்கமாக, குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து அணி தற்போது அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
இந்த சூப்பர் 12 சுற்றில் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதால் ஆஸ்திரேலிய அணி அரை இறுதி வாய்ப்பையும் தக்க வைத்திருந்தது. ஆனால் அதே வேளையில் இன்றைய இலங்கை மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவின் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான விஷயம் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சற்று தடுமாற்றம் கண்டது. அப்படி ஒரு சூழலில் கடைசி கட்டத்தில் ரஷீத் கான் அதிரடி காட்ட, ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகி இருந்தது.
கடைசி ஓவரில் 22 ரன்கள் வேண்டும் என்ற நிலையில், அந்த ஓவரில் 17 ரன்கள் சேர்க்கப்பட ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. அதாவது 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதனிடையே இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது 4வது ஓவரை ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் வீசி இருந்தார்
It feels a bit odd that the five-ball over hasn't been mentioned once on the broadcast.
— Daniel Cherny (@DanielCherny) November 4, 2022
ஆனால், இந்த ஓவரில் மொத்தம் 5 பந்துகளை தான் நவீன் வீசினார் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
How is it possible there can be a five-ball over in international cricket? Totally unacceptable. The only thing fair from here is Afghanistan also only gets five balls in its fourth over. #T20WorldCup
— Adam White (@White_Adam) November 4, 2022
அத்துடன் இது தொடர்பாக நடுவர் கூட எந்தவித கருத்தையும் அந்த சமயத்தில் தெரிவிக்கவில்லை என்றும், 6 பந்துகள் வீச வேண்டிய இடத்தில் 5 பந்துகளே வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விஷயம் சர்ச்சையாக, தற்போது கிரிக்கெட் ரசிகர் மத்தியில் இது தொடர்பான கருத்துக்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.
Just had a re-watch, this is bizarre.
Ball 3.4 the one in question.
Aussies took 2 then got another on the overthrow.
Was put down as two runs off 3.4 and three runs off 3.5.
Only five deliveries in the over. Very weird. #T20WorldCup https://t.co/3oCdzzwix4
— Lachlan McKirdy (@LMcKirdy7) November 4, 2022
எனினும் இந்த விஷயம் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை பாதிக்கவில்லை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.