"பந்து எங்கய்யா போச்சு??.." கெத்து காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை.. வாயடைத்து போன கிரிக்கெட் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்மகளிருக்கான ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, தற்போது நியூசிலாந்தில் வைத்து மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஐம்பது ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.
அசத்தல் வெற்றி
அதிகபட்சமாக, கேம்ப்பெல்லி 66 ரன்கள் எடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, பேட்டிங்கில் சற்று தடுமாற்றம் கண்டது. இருந்த போதும், கடைசி நேரத்தில் ஒரு விறுவிறுப்பு உருவாகியது. ஆனாலும், 48 ஆவது ஓவரில், இங்கிலாந்து அணி 218 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
வியப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்
மேலும், உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களின் முதல் வெற்றியையும் வெஸ்ட் இண்டீஸ் அணி பதிவு செய்துள்ளது. இவை அனைத்தையும் விட, வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனை ஒருவர் பிடித்த கேட்ச் தான், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அருகே சென்ற பந்து
இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடிக் கொண்டிருந்த போது, ஐந்தாவது ஓவரில் வந்த பந்தை, இங்கிலாந்து வீராங்கனை வின்ஃபில்ட் ஹில் எதிர்கொண்டார். அதனை பாய்ண்ட் திசையில் வேகமாக அடிக்க அவர் முற்பட்டார். அப்பகுதியில் பீல்டிங் நின்று கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியாண்டிரா டாட்டின் அருகே பந்து சென்றது.
வியப்புடன் பார்த்த வீராங்கனைகள்
சற்று வேகமாக பந்து திரும்பி சென்றதால், பவுண்டரி சென்று விடும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், அங்கு நடந்ததோ வேறு. ஆம், பீல்டிங் நின்று கொண்டிருந்த டாட்டின், வேகமாக காற்றில் பறந்து, ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். சக வீராங்கனைகளும் வியப்புடன் பார்க்க, கிரிக்கெட் ரசிகர்களும் ஆச்சரியத்தில் மூழ்கி போயினர்.
'வைரல்' வீடியோ
இது தொடர்பான பதிவு ஒன்றை, ஐசிசியும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "இந்த தொடரின் சிறந்த கேட்ச் இது" என்றும் குறிப்பிட்டுள்ளது. கிரிக்கெட் வீராங்கனை ஒருவர், சாகசம் செய்வது போன்று, அந்தரத்தில் பிடித்த கேட்சினை பலரும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
What a one-handed blinder from @Dottin_5 !!😍 #ENGvWI #CWC22 #CricketTwitter
— 171 Not Out #CWC22 (@171notout) March 9, 2022
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் அதிகம் வைரலாகி வருகிறது.