‘உன் இடத்துக்கே வந்திருக்கேன்.. யார் பெரியவன்னு பாத்துருவோமா?’.. ‘ஒத்தைக்கு ஒத்தை வர்றியா’.. மல்யுத்தத்தில் ஈடுபட்ட ‘கொமேடோ டிராகன்கள்!’

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Siva Sankar | Feb 27, 2020 11:51 AM

இந்தோனேஷிய வனப்பகுதியில் 4 கொமேடோ டிராகன்கள் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க மார்போடு மார்பு முட்டி மல்யுத்த சண்டையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

komodo dragon fight with each other pic goes viral

இந்தோனேஷிய தீவுகளில் மட்டுமே  காணக்கூடிய உலகின் மிகப்பெரிய பல்லி இனம்தான் 10 அடி நீளமும் 80 கிலோ வரை எடையும் கொண்ட கொமேடோ டிராகன்கள். இவற்றின் எச்சில் கடும் விஷத்தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொமேடோ தேசியப் பூங்காவிற்கு வனத்துறை ஊழியர் ஒருவர் எப்போதும் போல பராமரிப்புப் பணிக்குச் சென்றபோது, அங்கு இரண்டு கொமேடோ டிராகன்கள் மல்யுத்த சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைக் கண்டுள்ளார்.

வெறும் வால்களை மட்டுமே நிலத்தில் ஊன்றிக் கொண்டு சுமார் 8 அடி உயரத்திற்கு எழும்பி நின்று இவை சண்டையிட்டதைப் பார்த்ததும் அந்த வனத்துறை ஊழியர் கச்சிதமாக படம் பிடித்து யார் பெரியவர் என்பதை காட்டு இவற்றுக்குள் எப்போதும் இந்த சண்டை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

Tags : #KOMODO DRAGON