மற்றவர்களுக்கு தானம் அளிப்பது நமக்கு மன நிம்மதி, புகழ் ஆகியவற்றை தேடித்தரும். குறிப்பாக அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.

அதே வேளையில் சில பொருட்களை நாம் எப்போதும் தானம் அளிக்கவே கூடாது. மீறி அதனை தானமாக கொடுத்தால் நமக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படும். என்னென்ன பொருட்களை தானம் அளிக்கக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.
கூர்மையான பொருட்களான கத்தி, கடப்பாறை, ஊசி போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தீர்கள் எனில் கெட்ட பலன்கள் உங்கள் வீட்டை தேடி வரும். பழைய உணவுகளை தானமாக கொடுத்தீர்கள் எனில் வரவுக்கு மீறிய செலவுகள் வரும்.
மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய துடைப்பத்தை தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் வீட்டில் பணப்பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். எனவே எந்த சூழ்நிலையிலும் இந்த மூன்று பொருட்களையும் தானமாக கொடுத்து சிரமங்களை விலை கொடுத்து வாங்கி கொள்ளாதீர்கள்.

மற்ற செய்திகள்
