தென்னிந்தியாவில் 6 கிளைகளை திறக்கும் வீ கேர்..சுற்றுச்சூழலை காக்க எடுத்த இரண்டு முயற்சிகள்
முகப்பு > செய்திகள் > இந்தியாதலைமுடி ( care) மற்றும் தோலுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் VCare நிறுவனம் தென்னிந்தியா முழுவதும் மேலும் 6 புதிய கிளைகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது

தலை முடி மற்றும் தோல் பிரச்சனைகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற VCare, அதிகமான மக்களைச் சென்றடையவும், பல்வேறு சேவைகள் மற்றும் தீர்வுகளை மக்களுக்கு வழங்கவும் இந்த 6 கிளினிக்குகளை புதிதாக அமைப்பதாக கூறியுள்ளது.
VCare தொடங்கும் ஹேர் & ஸ்கின் கிளினிக்குகள் நாகர்கோவில், கும்பகோணம், ஈரோடு, கர்னூல், ராஜமுந்திரி மற்றும் பல்லாரி ஆகிய இடங்களில் திறக்கப்படுகிறது. இந்த புதிய கிளைகள் திறப்பின் நோக்கம் அதன் சேவையை விரிவுபடுத்தவும், மேலும் மக்களுக்கு தோல் மற்றும் தலைமுடி தொடர்பான ஆலோசனை வழங்குவதுமே ஆகும்.
தொழில்துறையில் 19 வருட அனுபவம் கொண்ட VCare இன் தலைவர் டாக்டர் கரோலின் பிரபா ரெட்டி கூறும் போது, ட்ரைக்கோலஜிஸ்டுகள், ஆராய்ச்சி வல்லுநர்களின் கண்டுபிடிப்புகளை திறம்பட பயன்படுத்தி சிறந்த அனுபவத்துடன் நிறுவனம் இயங்குகிறது.
சுற்றுச்சூழல் விஷயத்தில் விகேர் நிறுவனம் இரண்டு முக்கிய மாற்றங்களை எதிர்கொள்ள உள்ளதாக அதன் CEO முகுந்தன் சத்தியநாராயணன் கூறினார். இதுபற்றி அவர் கூறும் போது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஒரு பகுதியாக காகித பயன்பாட்டை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி பணம் செலுத்த காகித பில்லிங் முறைக்குப் பதிலாக இ-பில்லிங் முறையை கொண்டு வர உள்ளோம்.
இதேபோல் சுற்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றொரு படியாக எங்கள் தயாரிப்புகளை வழங்கும் பையில் மாற்றம் கொண்டு வருகிறோம். இனி மரவள்ளிக்கிழங்கை அடிப்படையாகக் கொண்ட 100% bio-degradable பைகளில் தான் எங்கள் தயாரிப்புகளை வழங்குவோம். இந்த பசுமை முயற்சி கார்பன் அளவை குறைக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.
இதனிடையே நாகர்கோவில், கும்பகோணம், ஈரோடு, கர்னூல், ராஜமுந்திரி மற்றும் பல்லாரி உள்ளிட்ட இடங்களில் தொடங்க உள்ள அனைத்து 6 கிளைகளையும் விகேர் நிர்வாக இயக்குனர் டாக்டர் கரோலின் பிரபா ரெட்டி, பிப்ரவரி 6, 2022 அன்று காலை 10:30 மணிக்கு ஆன்லைனில் திறந்து வைக்க உள்ளார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
