'மாமா தானேன்னு நெனச்சோம்...' 'சாக்லெட் கொடுப்பதாக 3 வயசு குழந்தைய வாங்கிட்டு போய்...' - பாலியல் வன்கொடுமை செய்த சொந்தக்காரர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 29, 2020 02:12 PM

உத்தரப்பிரதேசத்தில் மூன்று வயது பெண் குழந்தையை, மாமாவே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

Uttar Pradesh three year girl sexually abused by her uncle

சிறிய குழந்தைகள் முதற்கொண்டு வயது வித்தியாசமின்றி பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றன. இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தில் சாண்டி பகுதியில் 3 வயது சிறு குழந்தையை மாமா முறையுள்ள சொந்த உறவினர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பெண் குழந்தை ஆபத்தான லக்னோவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நியூஸ் 18-ன் அறிக்கையின்படி, 3 வயது குழந்தையை சாக்லேட் கொடுப்பதாக கூறி தனியே அழைத்து சென்று இந்த கொடூர செயலை நிகழ்த்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் கைது செய்யப்படுவார் என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : #CRUELUNCLE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uttar Pradesh three year girl sexually abused by her uncle | India News.