நடிகர் ராம் சரண் & உபசன்னாவின் முதல் குழந்தை.. பிரசவம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தம்பதியர்! முழு விவரம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pichaimuthu M | Feb 28, 2023 07:39 PM

RRR புகழ் நடிகர் ராம் சரண் & அவரது மனைவி உபசன்னா தங்களது முதல் குழந்தையின் பிரசவம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Upasana Ram Charan announce that India will be their baby birthplace

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Samantha : கைகளில் காயத்துடன் சமந்தா பகிர்ந்த ஃபோட்டோ.. என்ன ஆச்சு? பரபரப்பில் ரசிகர்கள்.!

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. நடிகர் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்திருந்தார்.

RRR படம் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது.

Upasana Ram Charan announce that India will be their baby birthplace

Images are subject to © copyright to their respective owners.

தற்போது ராம் சரண், ஷங்கர் இயக்கத்தில் RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.  ராம் சரண் & உபசன்னா தங்களது முதல் குழந்தையை எதிர் நோக்கி உள்ளனர் என நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் &  அணில் காமினேனி குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.

2012-ல் ராம் சரண் & உபசன்னா திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. உபசன்னா, அப்போலோ மருத்துவமனை சேர்மன் பிரதாப் ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. அப்பல்லோ மருத்துவமனையின் CSR-இன் துணைத் தலைவராகவும் உபசன்னா பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் உபசன்னா & ராம் சரண் இருவரும் தங்களின் முதல் குழந்தையின் பிறப்பிடம் இந்தியாவாக இருக்கும் என்று  அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் தம்பதியினர் தங்கள் குழந்தையை பிரசவிக்க உள்ளனர் என வதந்திகள் பரவின.

Upasana Ram Charan announce that India will be their baby birthplace

Images are subject to © copyright to their respective owners.

உபசன்னா தமது டிவிட்டர் பக்கத்தில், "எங்கள் தாய்நாட்டில் எங்கள் முதல் குழந்தை பிறப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா, அப்பல்லோ மருத்துவமனையின உலகத்தரம் வாய்ந்த மருத்துவ OB/GYN குழுவால் சூழப்பட்டுள்ளது, டாக்டர் சுமனா மனோகர், டாக்டர் ரூமா சின்ஹா ​​மற்றும்  டாக்டர் ஜெனிபர் ஆஷ்டன் ஆகியோர் இந்த மருத்துவ குழுவில் உள்ளனர். இந்தப் பயணம் எங்களுக்கு பல அற்புதமான அனுபவங்களைத் தருகிறது. மேலும் எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்குகிறோம்." என ட்வீட் செய்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனைகளில், OB/GYN குழுவில் டாக்டர் சுமனா மனோகர் மற்றும் டாக்டர் ரூமா சின்ஹா ​​ஆகியோர் இருப்பார்கள். மேலும், டாக்டர் ஜெனிபர் ஆஷ்டன், போர்டு-சான்றளிக்கப்பட்ட OB/GYN, எழுத்தாளர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி மருத்துவ நிருபர் ஆவார்.

இவர்கள் ராம் சரண் & உபசன்னா தம்பதியரின் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிரபல இயக்குனருடன் விஜய் சேதுபதி இணையும் புதிய படம்.. டைட்டில் இது தானா? மாஸா இருக்கே..!

Tags : #RAM CHARAN #UPASANA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Upasana Ram Charan announce that India will be their baby birthplace | India News.