'என்ன அடிச்சு துன்புறுத்துறாங்க'...'ஜெயிலுக்குள்ள' என்ன தான் நடக்குது?...கொந்தளித்த நீதிபதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 20, 2019 08:51 AM

இஸ்லாமிய சிறைக் கைதி ஒருவர்,சிறை அதிகாரிகள் தன்னை அடித்து துன்புறுத்தியதோடு,தன்னுடைய முதுகில்  'ஓம்' முத்திரையை குத்திவிட்டதாக நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

Tihar Jail superintendent tattooed \"Om\" on Prisoner Nabir back

ஆயுதங்கள் விற்றக் குற்றத்திற்காக டெல்லியின் சீலம்பூரி பகுதியை சேர்ந்தவர் நபீர் என்பவர் விசாரணை கைதியாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே நபீரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் நேற்று அவர் கார்கர்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.அப்போது நீதிபதியிடம் பரபரப்பு புகார் ஒன்றை கூறினார்.நான் இஸ்லாமியர் என தெரிய வந்ததும்,சிறை அதிகாரிகள் என்னுடைய முதுகில் 'ஓம்' முத்திரையை குத்தி விட்டதாக தெரிவித்தார். மேலும் என்னை அடித்து சித்திரவதை செய்ததுடன்,சாப்பிடாமல் பட்டினி இருக்குமாறு வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

நபீரின் புகாரால் அதிர்ந்து போன நீதிபதி ரிச்சா பாராசர்,இந்த புகார் குறித்து விசாரித்து 24 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய  திஹார் சிறையின் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.நீதிபதியின் உத்தரவில் 'குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் புகார் மிக முக்கியமான ஒன்றாகும்.அது நிச்சயமாக விசாரிக்க பட வேண்டும்.மேலும் திஹார் சிறையின் டிஜிபி உடனே நபீரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்று அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

மேலும் சிறைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு தெரிய வேண்டும்.டிஜிபி இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் சக கைதிகளிடமும் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொள்ள பட வேண்டும்.இது தொடர்பான அனைத்து விசாரணை அறிக்கையையும் 24 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #TIHAR JAIL #NABIR #KARKARDOOMA COURT #OM