ஃபாரல் வில்லியம்ஸின் 'ஹாப்பி' பாடல்.. நடனத்தில் அசத்தும் விமானப்படை மருத்துவமனை மருத்துவர்கள்.. வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Apr 29, 2019 12:33 PM
விமானப் படை மருத்துவமனையில், மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் 'ஹாப்பி' என்ற பாடலுக்கு ஆடும் நடனம், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல அமெரிக்க பாடகரான ஃபாரல் வில்லியம்ஸின் (pharell Williams) 'ஹாப்பி' (Happy) என்ற வீடியோ பாடல் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் பாடல் இசை ரசிகர்கள் மட்டுமின்றி, அனைவரையும் கவர்ந்தது. இந்தப் பாடலுக்கு பலரும் நடனமாடி, தங்களது வீடியோக்களை இணையத்தளம் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவவிட்டனர்.
எனினும், 'மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் எப்போதும் என்ற நோக்கத்தில்', தற்போது சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் விமானப் படை மருத்துவமனை உள்ளது. அங்குள்ள மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் முதல் குழந்தைகள் வரை இந்தப் பாடலுக்கு நடனமாடும் காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியவண்ணம் உள்ளனர். ஆண், பெண் பேதமின்றி, பிறந்த குழந்தைகள் கூட அசைவு மூலம் தங்களது நடனத் திறமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த வீடியோ கங்னம் ஸ்டைல் பாடலை நினைவுப்படுத்துவதாகவும் உள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில், அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
From the air force hospital in Gorakhpur - the Happy song to cheer up the day. pic.twitter.com/1J4YnLApTc
— Manu Pubby (@manupubby) April 27, 2019
