ஒரு நாளைய வருமானம் இவ்வளோவா?.. முன்னணி நிறுவனங்களுக்கே டஃப் கொடுக்கும் START UP நிறுவனம்.. SECRET இதுதான்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா புதிய தொழில்களை துவங்க ஏற்ற இடமாக கருதப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் மக்கள் தொகை. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கிளைகளை இந்தியாவில் துவங்க ஆர்வம் காட்டிவருகின்றன. அதேவேளையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வருகையும் சமீப காலங்களில் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஒற்றை ஐடியாவை மூலதனமாகக்கொண்டு வெற்றிக்கொடி கட்டிய பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நாம் கண்டிருக்கிறோம். தற்போது அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்திருக்கிறது ஆஸ்ட்ரோடாக் நிறுவனம்.

6 வருஷமா கழுத்தில் சிக்கிய டயருடன் போராடிய முதலை.. மீட்பவருக்கு சன்மானம் அறிவிப்பு..
ஹைடெக் ஜோசியம்
ஸ்மார்ட் போன், டிஜிட்டல் மயமான உலகம் என நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு உலகம் வளர்ந்துவந்தாலும் சோதிடம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் சேர்ந்தே அதிகரித்துவருகிறது. எதிர்காலத்தை தெரிந்துகொள்ள மக்களிடம் இருக்கும் ஆர்வம் தான் இந்த ஆஸ்ட்ரோ டாக் நிறுவனத்தின் முதலீட்டுக்களம் .
இந்த நிறுவனம் துவங்கப்பட்ட இந்த 4 ஆண்டுகளில் இதுவரையில் 2 கோடி பேர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வயதானவர்களே சோதிடத்தின்மீது அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அடுத்த பாராவில் நீங்கள் படிப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
ஆம். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். 21 முதல் 35 வயதுடையவர்கள் தான் இந்த அப்ளிகேஷனை அதிகம் பயன்படுத்துகிறார்களாம். தங்களது வாடிக்கையாளர்கள் அதிகம் தங்களிடம் கேட்கும் கேள்விகள் குறித்து கருத்துத் தெரிவித்த இந்த நிறுவனம், 30 சதவீதமானோர் தங்களது வேலைவாய்ப்பு குறித்தும், 60 சதவீத மக்கள் காதல், திருமண உறவுகள் பற்றியும், மீதமுள்ள 10 சதவீத மக்கள் உடல்நலன் மற்றும் நிதிநிலை பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருநாள் வருமானம்
ஒவ்வொரு மாதமும் 20 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்காகவும் ஒரு நாளைக்கு 41 லட்சம் வரையில் வருவாய் ஈட்டுவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
24 மணிநேரமும் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க 2500 ஜோதிடர்கள் இந்த அப்ளிகேஷன் வாயிலாக காத்திருக்கின்றனர்.
ஜோதிடத்தின் மீது நம்பிக்கை..
கடந்த 2017 ஆம் ஆண்டு புனீத் அகர்வால் என்பவர் இந்த நிறுவனத்தைத் துவங்கினார். ஆரம்பத்தில் சோதிட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்ததாகவும் பின்னர் நண்பர் ஒருவர் மூலமாக சோதிடத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதாகவும் புனீத் கூறுகிறார்.
புனீத்தின் ஜாதகத்தை கணித்த அவரது நண்பர் ஒருவர், "ஐடி துறையில் புதிய நிறுவனம் ஒன்றினை துவங்கி அதன்பிறகு அதிலிருந்து வெளியேறிவிடுவாய்" எனக் கூறியிருக்கிறார். அதேபோல 2015 ஆம் ஆண்டு, புதிய தொழில் துவங்கிய கொஞ்ச நாளில் அதிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறுகிறார் புனீத்.
முன்பே சொன்னதுபோல, எதிர்காலத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற மக்களின் ஆர்வமே ஆஸ்ட்ரோ டாக் போன்ற பெரும் நிறுவனங்களின் அஸ்திவாரம். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிச்சயம் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. அதன் காரணமாகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்டிருந்தார். அவை பற்றி கீழே காணலாம்..
பாதுகாப்புத்துறை மற்றும் ஆராய்ச்சிக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 25% தொகை தளவாடங்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க ஊக்கமளிக்கப்படும் எனவும் டிஆர்டிஓ அமைப்புடன் இணைந்து ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்களைத் தயாரிக்க, வடிவமைக்க தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
"புர்கா என்னோட உரிமை" கூச்சலுக்கு நடுவே..தனியாக ஓங்கி ஒலித்த உரிமைக்குரல்.. - வைரலாகும் வீடியோ..!
