'கஜா, வர்தா'வை எல்லாம் தூக்கி சாப்பிட்ட 'ஃபோனி'...அதிரவைக்கும் ஃபோனியின் அலறல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | May 03, 2019 01:25 PM

வங்கக்கடலில் உருவான ஃபோனி புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் இன்று பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சரியாக காலை 8.30 மணி அளிவில் புயல் கரையை கடக்க துவங்கியது.

\'The sound and the fury\' video shows the landfall at Puri by Fani

இதனிடையே கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஃபோனி கரையை கடக்க துவங்கியது முதல்,அதன் ருத்திர தாண்டவம் ஆரம்பமானது. இந்தியாவின் பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ,புரியில் கரையை கடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை,ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.அதில் மரங்களை வேரோடு பிடுங்கி எறியும் அளவிற்கு பலத்த சத்தத்துடன் காற்றும்,மழையும் பெய்கிறது.

தற்போதைய தகவலின்படி,ஃபோனி புயலானது  ‘ஒடிசா கடற்கரையை 150 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து வருகிறது.1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் புயலாக ஃபோனி இருக்கும் என,வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

Tags : #GAJACYCLONE #CYCLONE FANI #OODISHA ##CYCLONEFANI