'இயல்பை விட குறைவான வெப்பநிலை'... 'குளிர் வேற லெவெலில் இருக்க போகுது'... இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுளிர் காலம் ஆரம்பிக்க உள்ள நிலையில், இந்த வருடம் குளிர் காலம் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.

மத்திய அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வானிலைத் துறை கடந்த 2016ம் ஆண்டு முதல் பருவகால முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குளிர்கால வெப்பநிலை குறித்து இந்திய வானிலைத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''நாட்டின் வடக்கு, வடமேற்கு, மத்தியப் பகுதி மற்றும் கிழக்கிந்தியப் பகுதியில் வரும் டிசம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புக்கும் குறைவானதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள், மேற்கு கடலோர பகுதியின் சில பகுதிகள், நாட்டின் தெற்கு தீபகற்ப பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்புக்கு அதிகமாக இருக்கும்'' என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
