‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் இனிமேல்..’ கையெழுத்தான அரசின் புதிய மசோதா..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 27, 2019 08:45 PM

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற புதிய மசோதா உத்தரகாண்ட் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

people with more than 2 kids cannot contest panchayat polls

நேற்று நடைபெற்ற மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கும் வகையில் புதிய மசோதா ஒன்று கையெழுத்தாகியுள்ளது. உத்தரகாண்ட் பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா-2019 என்ற இந்த மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ளது. இதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உத்தரகாண்ட் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதைப்போல உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியையும் இந்த மசோதா வரையறுத்துள்ளது. அதன்படி தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பெண்களும், தலித் பிரிவு ஆண்களும் 8-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அதேநேரம் தலித் பிரிவு பெண்கள் 5-ம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது. பாஜக ஆளும் உத்தரகாண்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #NEWBILL