‘திரும்பி வந்துட்டோம்னு சொல்லு!’.. ‘உங்க பொறுமைக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி!’.. ‘யெஸ் வங்கியின் வைரல் ட்வீட்!’

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 18, 2020 10:05 PM

தங்களுடைய வங்கி சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாக YES வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our banking services are now operational, Yes Bank tweet

கடந்த மார்ச் 5ம் தேதி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் YES வங்கியின் நிறுவனத்தை கொண்டுவந்ததோடு, YES வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுபாடுகளையும் விதித்தது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதைத் தொடர்ந்து YES வங்கியின் பங்குகளில் ரூபாய் 10 ஆயிரம் கோடியை முதலீடு செய்து அதனை ஸ்டேட் பாரத் வங்கி கையில் எடுத்துள்ளது. அத்துடன் ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, ஆக்சிஸ் வங்கி, பெடரல் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் நூற்றுக்கணக்கான கோடிகளை YES வங்கியின் பங்குகளில் முதலீடு செய்தன. இதன் எதிரொலியாக YES வங்கியின் பங்குகளை 58 சதவீத வளர்ச்சி கண்டன.

இதனைத் தொடர்ந்து YES வங்கி மீண்டும் மார்ச் 18ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்திருக்கிறார். அதன்படி YES வங்கி மீண்டும் சேவைக்கு வந்துவிட்டதாக அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்த பதிவில் தங்களது வங்கி சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் தற்போது தங்களின் சேவையை முழுமையாக பெற முடியும் என்றும் வாடிக்கையாளரின் பொறுமைக்கும்  ஒத்துழைப்புக்கும்

நன்றிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : #YESBANK