7-ல் ஒரு இந்தியருக்கு... 'மனநல' நோய் பாதிப்பு உள்ளது... ஷாக் ரிப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 25, 2019 12:44 AM

இந்திய மக்களின் மனநிலை தொடர்பாக இந்திய ஆய்வு கவுன்சில் நாடு முழுவதும் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

One in seven Indians affected by a mental disorder: report

மன அழுத்தம், பதட்டத்தால் ஏற்படும் படபடப்பு, மனச்சிதைவு, இருவிதமான எண்ணங்கள், அறிவுத்திறன் பாதிப்பு, மனநிலை வேறுபாடு, ஆட்டிசம் போன்றவை மனநிலை பாதிப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 7 பேரில் ஒருவர் இதில் ஏதாவது ஒரு மனநிலை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.இந்திய மக்களில் சுமார் 19 கோடியே 70 லட்சம் பேருக்கு மனநல பாதிப்புகள் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1990-ம் ஆண்டை ஒப்பிடும்போது மனநல பாதிப்பானது 2 மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நமது  நாட்டில் 4 கோடியே 57 லட்சம் பேர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். 4 கோடியே 49 லட்சம் பேர் பதட்டத்தால் ஏற்படும் படபடப்பு நோய்க்கு ஆளாகி உள்ளனர்.

33.8 சதவீதம் மக்கள் மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளால் செயல்பட முடியாமல் முடங்கி விடுவதாகவும், 19 சதவீதம் பேர் பதட்டத்தால் முடங்கும் நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதில் 10.8 சதவீதம் பேருக்கு அறிவு திறன் செயல்பாடு வீழ்ச்சி அடைகிறது. 9.8 சதவீதத்தினர் மனச்சிதைவுக்கு ஆளாகி உள்ளனர்.

மக்களிடம் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், உரிய சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் இந்த பாதிப்புகளை குறைக்க முடியும் என்றும் மருத்துவர்கள் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.

Tags : #MENTALHEALTH