'எனது வீட்டில் வருமானவரித்துறை தேடிய 3 விஷயங்கள்'... 'கிண்டலடித்த டாப்ஸி'... வைரலாகும் டாப்ஸியின் ட்விட்டர் பதிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 06, 2021 03:49 PM

டாப்ஸிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்ட நிலையில், அதுகுறித்து டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

\"Not So Sasti Anymore\": Actor Taapsee Pannu On 3 Days Of Tax Raids

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கணக்கில் காட்டப்படாத பணமோசடி நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டதாக வருமானவரித் துறை குற்றம்சாட்டியிருந்தது.

வேளாண் சட்டத்துக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி ஆகியோர் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் தெரிவித்து வரும் கருத்துகளின் காரணமாகத் தான் இந்த சோதனை நடந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் இந்த நடவடிக்கையை "அவர்களின் குரல்களை அடக்கும் முயற்சி" என்று விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவை அனைத்தும் ஃபேண்டம் ஃபிலிம்ஸ், அனுராக் காஷ்யப், டாப்ஸி, விகாஸ் பல், மது மண்டேனா, க்வான் என்கிற திறன் மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் தொடர்புடைய இடங்கள்.

மேலும் டாப்ஸிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான பண ரசீது ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் வருமானவரித்துறை சோதனை குறித்து டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் `நான் மலிவானவள் இல்லை' என்று பதிவிட்டு 3 காரணங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவிலிருந்து.

"3 நாள்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந்தது.

1. பாரீஸில் எனக்குச் சொந்தமாகப் பங்களா ஒன்று இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை நாள்கள் வரப்போகின்றன.

2. என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ஃப்ரேம் செய்து மாட்டி எதிர்காலத்தில் எனக்குத் தரப்போகிறார்கள். ஏனென்றால், அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்தேன்.

3. நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013-ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகள் என்னிடம் இருக்கின்றன.

எனக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். இதனிடையே டாப்ஸியின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. "Not So Sasti Anymore": Actor Taapsee Pannu On 3 Days Of Tax Raids | India News.