"என்ன நெல்சன் எப்டி??..." கொஞ்சம் கூட மிஸ் ஆகாம.. அப்டியே 'ஜெராக்ஸ்' எடுத்துருக்காங்க... 'சுட்டீஸ்' செய்த அசத்தல் 'SO BABY’ SPOOF 'வீடியோ'.. செம 'வைரல்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 05, 2021 07:39 PM

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'டாக்டர்'. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

children made a spoof video of so baby lyric gone viral

இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில், டாக்டர் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

children made a spoof video of so baby lyric gone viral

அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு பாடலுக்கான லிரிக் வீடியோவில், இயக்குனர் நெல்சன், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இணைந்து பாடலை உருவாக்குவது போல செய்யும் நகைச்சுவையும் அதிகம் வைரலாகியிருந்தது.

children made a spoof video of so baby lyric gone viral

அதே படத்தில் இருந்து, சமீபத்தில் வெளியாகியிருந்த 'So Baby' என்ற பாடலின் லிரிக் வீடியோவிலும் மூன்று பேர் இணைந்து பாடல் உருவாகும் விதத்தை வீடியோவாக ரிலீஸ் செய்திருந்தனர். இந்நிலையில், அதில் வரும் லிரிக் வீடியோவை மையப்படுத்தி, சுட்டிக் குழந்தைகள் ஒன்றிணைந்து, spoof வீடியோவாக உருவாக்கியுள்ளனர்.

 

நிஜ வீடியோவில் வருவதைப் போன்றே குழந்தைகள் மிகவும் சிறப்பாக இந்த வீடியோவில் தத்ரூபமாக நடித்துள்ள நிலையில், நெட்டிசன்களிடையே இந்த வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Children made a spoof video of so baby lyric gone viral | Tamil Nadu News.