‘டீ, தண்ணீர் எதுவும் வேணாம்.. ஆனா கடைசியா..’.. தூக்கிலிடப்படும் முன் ’நிர்பயா’ குற்றவாளிகள் கேட்டது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியா2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து கூட்டுப் பலாத்கார வன்முறைக்கு ஆளாக்க்கப்பட்டதை அடுத்து மருத்துவ மாணவி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவையே உலுக்கிய இந்த வழக்கில் பல்வேறு கட்ட சாட்சியங்கள், வாதங்கள், பிரதிவாதங்கள், மனுக்கள், மேல்முறையீடுகள், கடைசியாக கருணை மனுக்கள் என பல்வேறு பாதைகளைக் கடந்து நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. எனினும் தீர்ப்பளிக்கப்பட்டதில் இருந்து தூக்கு தண்டனைக்கு முந்தைய நாள் இரவு வரை குற்றவாளிகள் மனு அளித்ததும், அவை நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதா அளிக்கப்பட்ட டீ மற்றும் தண்ணீரை அவர்கள் ஏற்கவில்லை என்றும் கடைசி ஆசையாக தங்களது குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்கிற அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த தண்டனையை அடுத்து, ‘நாட்டு மகள் நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது’ என்று இணையவாசிகளும், ‘நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது’ என்று பிரதமர் மோடியும், ‘என் மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது’ என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியும் கூறியுள்ளனர்.
தவிர, #NirbhayaCase, #NirbhayaVerdict, #NirbhayaJusticeDay உள்ளிட்ட ஹேஷ்டேகுகளின் கீழ் இணையவாசிகள் இந்த வழக்கு பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
