லட்சத்துல ஒருத்தர்கிட்ட தான் இருக்கும்.. 10 வருஷ உயிர் போராட்டம்.. காப்பாத்துனவரு பெயர் தெரிஞ்சதும் காத்திருந்த ட்விஸ்ட்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Feb 11, 2023 01:59 PM

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மந்தீப் சிங். இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது. தொடர்ந்து இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 7 ஆண்டுகளுக்கு மேல் இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த சூழலிலும் உடல்நிலை சீரடையாமல் மோசமாக தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

Man survived by stem cell donor met him and thanked him

                            Images are subject to © copyright to their respective owners

ரத்த புற்றுநோயுடன் காய்ச்சல், எடையிழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் உடன் இருந்துள்ளதால் கடும் அவதிக்கும் உள்ளாகியுள்ளார் மந்தீப் சிங். கடந்த 2017 ஆம் ஆண்டு வரை இவருக்கு கை கொடுத்த மருந்துகள் அதன் பின்னர் வேலை செய்யவில்லை என்றும் தெரிகிறது.

இதனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்கள் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் மந்தீப் சிங்கிற்கு ஸ்டெம் செல் தேவை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஸ்டெம் செல் சிகிச்சை மேற்கொண்டால் தான் அவரது உடலில் மருந்துகள் வேலை செய்யும் என்று தெரிய வந்த சூழலில், அதன் டோனரையும் அவரது குடும்பத்தினர் தேட தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலான தேடலுக்கு பின்னர் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்தும் ஸ்டெம் செல் தானம் கிடைத்துள்ளது. இதற்கு ஒரு அறக்கட்டளை உதவி செய்ததாக சொல்லப்படும் நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்டு வந்த சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. முழுமையாக நோய் பாதிப்பில் இருந்து மீண்ட மந்தீப் சிங், தனக்காக ஸ்டெம் செல் தானம் செய்த நபரையும் சந்திக்க முயன்றுள்ளார்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தில் உயிருடன் திரும்பிய மந்தீப் சிங்கிற்கு ஸ்டெம் செல் கொடுத்து உதவிய பெங்களூரை சேர்ந்த நபரின் பெயரும் மந்தீப் சிங் என்பது தான் சிறப்பம்சமாக உள்ளது. இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் சூழலில், மந்தீப் சிங்கிற்கு உதவிய மந்தீப் சிங் என்றும் பலர் பாராட்டி குறிப்பிட்டு வருகின்றனர்.

Man survived by stem cell donor met him and thanked him

Images are subject to © copyright to their respective owners

அதேபோல ஸ்டெம் செல் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாத சூழலில் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இருப்பதாகவும் அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். இருவருக்கும் ஒரே மாதிரியான ஸ்டெம் செல் என்பது லட்சத்தில் ஒருவருக்கு தான் இருக்கும் என்பதால் இவ்வளவு டிமாண்ட் இதற்கு இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #STEM CELL #DONOR

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man survived by stem cell donor met him and thanked him | India News.