“திரைப்பட மாஃபியாவின், மெயின் அக்யூஸ்ட் இவர்தான்! எத்தன பேர் வாழ்க்கைய சீரழிச்சுட்டு”... நெருப்பாய் கொந்தளிக்கும் கங்கணா! அனல் பறக்கும் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நெப்போடிசம், மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சுஷாந்த் தற்கொலையை முன்வைத்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கணா ரணாவத் தொடர்ந்து தனது சமூக வலைதள பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் கடுமையாக சாடி வருகிறார்.
அதுபோக, கங்கணாவின் ரசிகர்களோ, கரண் ஜோஹர், சல்மான் கான், ஆலியா பட் இன்னும் பல்வேறு வாரிசு நடிகர்களின் சமூக வலைதளப் பக்கங்களுக்குச் சென்று தங்கள் பங்குக்கு அவர்களை சாடி வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் தான் என்று கங்கணா ரணாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கும் விதமாக அவர் பதிவிட்டுள்ள அந்த ட்வீட்டில், திரைப்பட மாஃபியாவின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர்தான். பலருடைடா வாழ்வு, தொழில்களை நாசமாக்கிய பின்னும் அவர் சுதந்திரமாகவே உலா வருகிறார். அவருக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனும்போது எங்களுக்கு நம்பிக்கை இருக்குமா? எல்லாம் சரியான பிறகு அவருடைய கழுதைப்புலி கூட்டம் என்னை தேடி வரவுள்ளன’ என்று குறிப்பிட்டு பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை டேக் செய்துள்ளார் கங்கணா.

மற்ற செய்திகள்
