"இந்தியாவில் முதல் முறையாக".. காஷ்மீரில் கிடைத்த புதையல்.. உலகையே திரும்பி பாக்க வெச்ச சம்பவம்.. "இனி ரூட்டே வேற"!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் இதுவரை லித்தியம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்த சூழலில், தற்போது வரை லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து தான் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
Images are subject to © copyright to their respective owners
இதற்கு மத்தியில் இந்தியாவின் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் சார்பில் நாட்டின் பல்வேறு இடங்களில் கனிமங்கள், தாது பொருட்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அப்படி இருக்கையில் தான் தற்போது அசத்தலான ஒரு தகவலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரைசி என்னும் மாவட்டத்தில் சலால் - ஹைமனா பகுதியில் லித்தியம் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அங்கே சுரங்கம் தோண்டப்பட்டு வந்த நிலையில், லித்தியம் இருப்பது தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இங்கே ஒட்டுமொத்தமாக சுமார் 5.9 மில்லியன் அளவிலான லித்தியம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், உலக நாடுகள் மத்தியில் அதிகம் லித்தியம் உள்ள நாடாகவும் இந்தியா உருவெடுக்கும் என தகவல்கள் கூறுகின்றது.
Images are subject to © copyright to their respective owners
அதே போல, பல உலக நாடுகளில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்ய முனைப்பு காட்டி வரும் சூழலில், அதற்கு மூலப் பொருளாக உள்ள லித்தியமும் அதிகம் தேவைப்படும் என்பதால் உலக அளவில் இந்தியாவின் பங்கு பெரிதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெரு வெடிப்பில் இருந்து வெளிப்படும் ஒரே உலோகம் லித்தியம். மிக இலகுவான உலோகமாக அது தண்ணீருடன் எரியக்கூடிய எதிர்வினையை உருவாக்குகிறது.. மண்பாண்டங்கள், கண்ணாடி, மருந்து கலவைகள், அலுமினியம் உள்ளிட்ட பலவற்றின் உற்பத்தியில் லித்தியம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவில் முதல் முறையில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிகம் பேசு பொருளாக மட்டும் மாறியது இல்லாமல், பல உலக நாடுகளையும் இந்தியா பக்கம் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.