பேட்மிண்டன் விளையாடும் போது ஏற்பட்ட சண்டை.. நானியை அடிக்க வந்த கீர்த்தி சுரேஷ் 🤣.. ஜாலியான வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாநேச்சுரல் ஸ்டார் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'.

Image Source: Keerthy Suresh Instagram
நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான டீஸர் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
Image Source: Keerthy Suresh Instagram
ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் நானி நேற்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானியுடன் பேட்மிண்டன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதிவில், " சினிமா, சினிமா, சினிமா பற்றி மட்டுமே பேசும் என் நண்பன், நலம் விரும்பி, சக நடிகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 😁
Image Source: Keerthy Suresh Instagram
இன்னும் 40 நாட்களே உள்ளன, எனவே சில கொண்டாட்டங்களை பின்னர் சேமிக்கலாம்! 2023 கும்மேசே தரணி!" என பதிவிட்டு நானியின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும், படப்பிடிப்பு தளத்தில் நானியுடன் பேட்மிண்டன் விளையாடி ஜாலியாக சண்டை போடும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் நானியை கீர்த்தி சுரேஷ் எடுத்த ஸ்டில்லையும் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்
