ஷோரூமில் விவசாயிக்கு நேர்ந்த துயரம்.. நேரடியாக இறங்கிய ஆனந்த் மஹிந்திரா.. அதிரடி ஆக்ஷன்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 26, 2022 01:19 PM

கர்நாடகா : தன்னுடைய ஷோரூமில் விவசாயிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து, ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார்.

karnataka anand mahindra respond for farmer humiliate in showroom

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்திலுள்ள ராமனபாளையா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்  கெம்பேகவுடா.

விவசாயியான அவர், சில தினங்களுக்கு முன், தும்கூர் பகுதியிலுள்ள மஹிந்திரா ஷோரூம் ஒன்றுக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில், விவசாயி கெம்பேகவுடா சற்று சாதாரண உடை அணிந்திருந்ததாகவும் தெரிகிறது.

கிண்டல் அடித்த ஊழியர்

இதன் காரணமாக, ஷோரூம் ஊழியர்கள் அவரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கார் ஒன்றின் விலையை கெம்பேகவுடா கேட்ட போது, சேல்ஸ்மேன் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. அத்துடன், நீங்கள் கார் வாங்க போகிறீர்களா என்றும், உங்களிடம் 10 ரூபாயையாவது இருக்குமா என்றும் சேல்ஸ்மேன் கிண்டல் அடித்துள்ளார்.

ஷாக் ஆன சேல்ஸ்மேன்

நிஜத்தில் தான் வாகனம் வாங்க வந்ததை திரும்ப அறிவுறுத்திய போதும், அங்கிருந்த ஊழியர்கள் நம்பாமல் மீண்டும் மீண்டும் கிண்டல் அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயி, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், 10 லட்ச ரூபாய் தயார் செய்வதாக சவால் விடுத்துள்ளார். அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கெம்பேகவுடாவின் நண்பர் பணத்தைக் கொண்டு வந்து தரவே, அங்கிருந்த ஊழியர்கள் திகைத்து போயுள்ளனர்.

போராடிய விவசாயி

பணத்தைக் கொடுத்த கெம்பேகவுடா, 'நீங்கள் கேட்டது போலவே பணத்தைக் கொடுத்து விட்டேன், நீங்கள் நான் கேட்ட வண்டியைக் கொடுங்கள்' எனக் கூறியுள்ளார். ஆனால் 2 நாளுக்கு பிறகு தான் வாகனம் டெலிவரி செய்யப்படும் என சொல்லவே, கெம்பேகவுடா மஹிந்திரா ஷோரூம் முன்பு போராட்டம் செய்துள்ளார். இது பற்றி தகவலிறந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர்.

மன்னிப்பு

இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட பிறகு, விவசாயி கெம்பேகவுடாவிடம் நடந்து கொண்ட செயலுக்கு ஊழியர்கள் மன்னிப்பு கோரினர். இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் அதிகம் வைரலாகி இருந்தது. இந்நிலையில், தன்னுடைய ஷோரூமில் நடந்த செயல் குறித்து, ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

பொதுவாக, ட்விட்டரில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள் குறித்து ட்வீட் செய்வார். பொங்கல் தினத்தன்று தமிழ் குறித்து ஆனந்த் மஹிந்திரா செசெய்திருந்த ட்வீட், மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, தன்னுடைய ஷோரூமில் நடந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, 'அனைத்து தரப்பினரையும் முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பது தான் மஹிந்திரா நிறுவனத்தின் நோக்கம். தனிநபர் கண்ணியத்தைக் காப்பதும் எங்களின் முக்கிய கொள்கை. இதில், ஏதேனும் சிறு தவறு ஏற்பட்டால் கூட, அதனை சரி செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.

 

தன்னுடைய ஷோரூமுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு நேர்ந்த செயல் பற்றி,  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள ஆனந்த் மஹிந்திராவிற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : #ANAND MAHINDRA #MAHINDRA #FARMER #KARNATAKA #கர்நாடகா #ஆனந்த் மஹிந்திரா #விவசாயி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka anand mahindra respond for farmer humiliate in showroom | India News.