'தடுப்பூசியை வச்சுக்கிட்டு கூகுளில் தேடுற விஷயமா இது'?... 'கூகுள் நம்மள பத்தி என்ன நினைக்கும்'... வெளியான இந்தியர்கள் தேடிய விஷயம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த ஓராண்டுக்கும் மேலாக உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக ஆட்டிப் படைத்து வரும் நிலையில், பல மாத போராட்டங்களுக்கு பின்னர், இந்த கொடிய வைரஸைக் கட்டுப்படுத்தும் தடுப்பூசி, தற்போது பல நாடுகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்த அரசு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த 16 ஆம் தேதி முதல் ஒவ்வொரு கட்டமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், இந்தியர்கள் அதிகம் பேர் கூகுளில் வினோதமான ஒரு விஷயத்தை தேடியுள்ளனர்.
'கொரோனா தடுப்பூசியை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?' என்பது தான் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரபலமான தேடல்களில் ஒன்றாக கூகுள் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளது. தற்போது மட்டுமில்லாமல், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம், அதாவது இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்திலும் வீட்டிலேயே தடுப்பூசியை எப்படி தயாரிப்பது என்பதை இந்தியர்கள் அதிகம் பேர் தேடியுள்ளனர்.
உண்மையில் இதற்கான பதில் என்ன என்றால் 'முடியாது' என்பது தான். பல மாதங்களாக பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அதிக நாடுகளில் பயன்பாட்டிலுள்ள கொரோனா தடுப்பூசிகளை வீட்டிலேயே தயாரிக்க முடியும் என்பது இயலாத ஒன்று தான். ஆனாலும், இந்தியர்கள் இதனை அதிகம் கூகுளில் தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
